இலங்கை புகைப்பட தொகுப்பு

யாழ். மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்

  • August 11, 2023
  • 0 Comments

யாழ். மண்டைதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் அனுசரனையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாம், 8ஆம் திகதி காலை 8 மணி முதல் 12 மணி வரை மண்டைதீவு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த மருத்துவமுகாமில் இலவச நீரிழிவு பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் பரிசோதனை தேவையானவர்களுக்கு விஷேட வைத்திய நிபுணர்களின் பரிசோதனையும் மருந்து வழங்கலும் இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களில் 150 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடியும் […]

இலங்கை

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள்! ஆளுநர் முக்கிய கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தின் எல்லைகளில் நடைபெறும் சடடவிரோத செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கும் அவுஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு படையின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (11.08.2023) ஆளுநர் அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத பயணங்கள், கடல் எல்லைகளில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்டன் அவுஸ்திரேலியப் எல்லைப்பாதுகாப்பு படையின் முதனிலை செயலாளர் பிராண்ட் இசண்ட அவர்களின் குழு, மற்றும் இலங்கை சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் […]

ஆசியா

தென் கொரியாவை புரட்டிபோட்ட கனுன் புயல் – ஸ்தம்பித்த விமான சேவைகள்

  • August 11, 2023
  • 0 Comments

தென் கொரியாவை புரட்டிபோட்டுள்ள கனுன் புயலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனுன் புயல் கரையை கடந்து இருக்கும் நிலையில், தென்கொரியாவில் சங்வோன் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தண்ணீரில் சிக்கிய பொதுமக்கள் 10,000த்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே போல் மீட்புப் படை வீரர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை மற்றும் வெள்ளப்பாதிப்பு காரணமாக 350 விமானங்கள் மற்றும் […]

இலங்கை

வரலாற்றுச் சாதனை படைத்த இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்கள்

  • August 11, 2023
  • 0 Comments

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் மாவட்டம் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவித்து வரவேற்கும் நிகழ்வு இன்று (9) வியாழக்கிழமை மாலை பாடசாலையில் இடம் பெற்றது.பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.கே.வொலன்ரைன் கலந்து கொண்டார். சாதனை வீரர்கள் பவனியாக பாடசாலை வரை அழைத்து வரப்பட்டு வாத்திய இசையுடன் பாடசாலை மண்டபம் நோக்கி […]

இலங்கை

மயங்கி விழுந்த இளைஞன் பரிதாபமாக பலி!

வெள்ளவத்தை, பெட்ரிகா வீதி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞர் வெள்ளவத்தையைச் சேர்ந்த 24 வயதுடையர் என தெரியவந்துள்ளது. இளைஞர் மயங்கி விழுந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

பொழுதுபோக்கு

ஷாருக்கான் உடன் ஆட்டம் போட்ட அட்லீ… வைரலாகும் வீடியோ…

  • August 11, 2023
  • 0 Comments

அட்லீ, இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ, நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளனர். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. வந்த இடம் என தொடங்கும் அப்பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அனிருத்தே பாடி இருந்தார். இந்நிலையில், வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோவை ஜவான் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் […]

இலங்கை

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வரலாற்றுக்கால பண்பாட்டு விழுமியங்களுடன் ஆரம்பமானது. கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது. கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றது. அதற்கிணங்க நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த திருவிழா பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் திருவிழா தொடர்பான […]

இலங்கை

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் படுகாயம்

  • August 11, 2023
  • 0 Comments

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்றிரவு (10) இடம் பெற்றுள்ளது. வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த லொறி மோதிவிட்டு சென்றதாகவும் லொறியின் டயருக்குள் இரு கால்களும் சிக்குண்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர் கந்தளாய் -லீலாரத்ன மாவத்தையில் ரியாஸ் முஹம்மட் ரிஸ்கான் (23) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த இளைஞரை இன்றைய தினம் […]

இலங்கை

முள்ளியவளை பொது சந்தைக்குள் விசமிகள் புகுந்து தாக்குதல்! பொலிஸார் தீவிர விசாரணை

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆழுகையின் கீழுள்ள முள்ளியவளை பொது சந்தை நேற்று இரவு அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட சந்தை கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்று (10) இரவு காவலாளி சந்தையின் முன் கதவினை பூட்டிய நிலையில் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சந்தையின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சந்தைக்குள் இருந்து மது அருந்தபோவதாக காவலாளியுடன் முரண்பட்ட நிலையில் கையில் மதுபான போத்தல்களுடன் வந்த நபர்கள் […]

இலங்கை

வவுனியாவில் வீடு புகுந்து தம்பதியினர் எரித்துக் கொலை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் இன்று (11.08) உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக […]

You cannot copy content of this page

Skip to content