இலங்கை

போலி விசாவை பயன்படுத்தி ஐரோப்பிய நாட்டிற்கு செல்ல முயன்ற இரு பெண்கள் கைது!

  • December 3, 2023
  • 0 Comments

போலி விசாரவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட இரு பெண்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள் இருவரையும் விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கு […]

இலங்கை

இலங்கையில் நடத்த பாரிய மோசடி : மாயமான 80 பில்லியன் ரூபாய்!

  • December 3, 2023
  • 0 Comments

இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா பெறுமதியான கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் தஞ்சம் பெற்று வரும் 10 வாடிக்கையாளர்களை நாட்டிற்கு வெளிப்படுத்த பாராளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் நேற்று (02.12) நடைபெற்ற மாநாட்டில் அவர் இதனை […]

மத்திய கிழக்கு

‘இன அழிப்பை நடத்தும் இஸ்ரேல்… அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்’- துருக்கி அதிபர் காட்டம்

  • December 3, 2023
  • 0 Comments

இஸ்ரேல், காசாவில் இன அழிப்பை நடத்தி வருவதாகவும், இதற்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் காட்டத்துடன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போர், 2 மாதங்களை நெருங்க உள்ளது. இதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதில் 5,000க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை […]

இலங்கை

(update) இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை! தீவிரம் அடையும் புயல் நிலைமை!

  • December 3, 2023
  • 0 Comments

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்மேற்கு வங்கக் கடலின் ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, மேற்படி கடலுடன் தொடர்புடைய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (03) 11.4° வடக்கு அட்சரேகை மற்றும் 82.5° கிழக்கு […]

ஐரோப்பா

பாரீஸில்‘அல்லாஹு அக்பர்’என முழங்கியபடியே சுற்றுலா பயணிகளுக்கு கத்திக்குத்து… ஒருவர் பலி,இருவர் படுகாயம்!

  • December 3, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் மர்ம நபர் ஒருவர் காசாவுக்கு ஆதரவாக சுற்றுலாப் பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்தனர். பாரீஸ் நகரில் பிரபலமான காய் டி கிரெனல் பகுதியில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குழுமியிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ’அல்லாஹு அக்பர்’ என்று முழங்கியபடியே தன் கையில் இருந்த கத்தியால் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அடுத்தடுத்து மூன்று பேருக்கு கத்திக்குத்து […]

இலங்கை

கல்முனை- நன்னடத்தை பாடசாலை சிறுவன் மரணம்;மேற்பார்வையாளரான பெண் கைது!

  • December 3, 2023
  • 0 Comments

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் […]

ஆசியா

பாகிஸ்தானில் ஓடும் பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பரிதாமாக பலி!

  • December 3, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜில்ஜித் பல்டிஸ்டான் பகுதியில் சுமார் 50க்கும் மேற்படோருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பாகிஸ்தானின் பெஷாவர் மற்றும் சிலாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த பேருந்தில் பயணித்தனர். நேற்று இரவு சில்லாஸ் பகுதி அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் திடீரென பேருந்து மீது துப்பாக்கிச் […]

பொழுதுபோக்கு

“இந்த படத்திலாவது அஜித் – த்ரிஷா இணைவது போல இருக்க வேண்டும்” ரசிகர்களின் ஏக்கம்

  • December 3, 2023
  • 0 Comments

அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியதாம். இதில் அஜித் ஜோடியாக த்ரிஷா நடித்து வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் விடாமுயற்சி, ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இருக்கும் என சொல்லப்படுகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். அஜித்துடன் த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர், ரெஜினா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். கடந்த மாதம் […]

ஆசியா

பிலிப்பைன்ஸில் கத்தோலிக்க தேவாலயத்தில் வெடி விபத்து – 4 பேர் – 9 பேர் காயம்

  • December 3, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மராவி நகரில் உள்ள Mindanao State University (MSU) உடற்பயிற்சி கூடத்தில் இன்று காலை இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் மேலதிக பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மறு அறிவித்தல் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், நகரம் இஸ்லாமிய போராளிகளுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே […]

பொழுதுபோக்கு

உடைத்து நொறுக்கிய பிரேமலதா.. விஜயகாந்த் போட்டோவை பார்த்தீர்களா?

  • December 3, 2023
  • 0 Comments

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டு உள்ளார். தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது.. மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை […]