ஆசியா

எல்லை பிரச்சினையை தீர்க்க 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை

  • August 15, 2023
  • 0 Comments

இந்தியா சீனா இடையிலான ராணுவ மட்டத்தில் 19வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எல்லையில் சீனப்படைகள் குறைப்பதற்காக இந்தியாவின் இடைவிடாத முயற்சியின் ஒருபகுதியாக லடாக்கின் சூசுல் பகுதியில் நேற்று இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் சந்தித்து பேச்சு நடத்தினர். காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30மணிக்கு பேச்சுக்கள் நிறைவு பெற்றன. இந்தப் பேச்சு வார்த்தையின் விவரங்கள் ஓரிரு நாளில் கைட்டு அறிக்கையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டொம்பர் மாதம் 9மற்றும் 10ம் திகதிகளில் பிரதமர் மோடி சீன […]

இலங்கை

13,493 பேருக்கு 13 கோடி ரூபா அபராதம் விதிப்பு! நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட 13,493 பேருக்கு 13 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 2,411 சோதனைகள் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்களுக்கு ரூ.236,41,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனைகளில், பெரும்பாலான சோதனைகள் முட்டை, அரிசி மற்றும் வாசனை திரவியங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாசனை திரவியங்கள் தொடர்பானவை. விலையை வெளியிடாமை, காலாவதியான பொருட்களின் விற்பனை […]

இலங்கை

மின்வெட்டு அபாயம் இல்லை – காஞ்சன !

  • August 15, 2023
  • 0 Comments

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் நிலவரம் தொடர்பான உண்மைகளை விளக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதுவரை மின்வெட்டு அபாயம் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு

ஏற்றும் போது கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக MLA(வீடியோ)

  • August 15, 2023
  • 0 Comments

கொடியேற்றும் போது, தேசியக்கொடி கீழே அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை அடிக்க கை ஓங்கிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 75வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக்கொடி ஏற்றினர்.மேலும், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் […]

பொழுதுபோக்கு

“இவரை காதலிக்கின்றேன்” மனம் திறந்தார் டிடி

  • August 15, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் திவ்யதர்சினி என்கிற டிடி. இவர் 21 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். திவ்யதர்சினி தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டிடி சிறிய கேம் விளையாடினர். அதில் அவர், பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோசனை விரும்புவதாகவும், ஏ.ஆர் ரஹ்மானை அடுத்த ஜென்மத்தில் […]

இலங்கை

மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் -அருட்தந்தை மா.சத்திவேல்

  • August 15, 2023
  • 0 Comments

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.அவரால் இன்று (15) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”இது சிங்கள பௌத்த நாடு. நான் வடகிழக்கிற்கு வருவேன். நீங்கள் விகாரைகளை தடுக்க முயன்றால், மகா சங்கத்தினரை எதிர்த்தால் நான் உங்கள் தலைகளை எடுத்துக் கொண்டு களனிக்கு […]

உலகம்

டிரம்ப் உட்பட 18 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு பிடிவாரண்ட் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்பை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பைடன் தோற்கடித்தார். இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தனக்கு எதிராக மிகப் பெரிய முறைகேடு நடந்ததாக தொடர்ந்து ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டினார்.. இதன்போது வன்முறையாளர்கள் சிலர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்ததில் ஏற்பட்ட வன்முறையில் சில உயிரிழப்புகளும் […]

இலங்கை

திருகோணமலையில் பௌத்த கொடியை அகற்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்

  • August 15, 2023
  • 0 Comments

திருகோணமலை நெல்சன் சினிமா திரையரங்கிற்கு அருகில் அரச மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த பௌத்த கொடிகளை அகற்றியதுடன் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான பகுதிக்குள் உள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் உப்புவெளி-ஆனந்தபுரி முதலாவது ஒழுங்கையில் வசித்து வரும் (45 வயது) உடையவர் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருவது திருகோணமலை நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்சன் சினிமா திரையரங்குக்கு […]

இந்தியா

இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்த உக்ரைன் பாடகி?

புனேவின் முந்த்வாவில் உள்ள ஒரு கிளப்பில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது இந்தியாவின் தேசியக் கொடியை அவமதித்ததாக உக்ரேனிய பாடகியும், சாந்தி பீப்பிள் இசைக்குழுவின் முன்னணி பாடகருமான உமா சாந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டது, பின்னர் சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது. உமா சாந்தி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கார்த்திக் மொரீன் ஆகிய இருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல் ஆய்வாளர் […]

இலங்கை

பிரித்தானியாவில் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

  • August 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில்  பொய்யான காரணங்களைக்கூறி, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களுக்கு உதவும் சட்டத்தரணிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சூயெல்லா பிரேவர்மேன், இதற்கான செயலணி ஒன்றையும் பிரித்தானிய அரசு அறிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். பல்லாயிரக்கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பணத்துக்காக, பொய்யான காரணங்களைக் கூறி, புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு முன்வந்த சட்டத்தரணிகள் பலரை, பொருளாதார அகதி போன்று நடித்த பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் அண்மையில் அம்பலப்படுத்தினார். இதனையடுத்தே குறித்த நடவடிக்கை […]

You cannot copy content of this page

Skip to content