தண்ணீரில் மிதக்கும் வீடுகளை அமைக்கும் மனோபோ பழங்குடி சமூகம்
2012 ஆம் ஆண்டில், தெற்கு பிலிப்பைன்ஸில் மனோபோ பழங்குடி சமூகம் வசிக்கும் அகுசன் மார்ஷ்லேண்ட்ஸ் பயங்கரமான சூறாவளியால் தாக்கப்பட்டது. இப்பகுதி ஆறுகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களைக் கொண்ட ஈரநிலப் பகுதியாகும். இங்கு கட்டப்பட்டுள்ள 33 அடி உயர மூன்று மாடி வீடு கூட வெள்ளத்தில் மூழ்கும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் தண்ணீரில் மிதக்கும் வீடுகள் என்ற கருத்தின்படி வீடுகளைக் கட்டியுள்ளனர்.