உலகம்

புகைப்பழக்கத்தை 2030க்குள் ஒழிக்க இங்கிலாந்து உறுதி!

2030 ஆம் ஆண்டுக்குள் இங்கிலாந்தில் புகைப்பழக்கத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸ்டீவ் பார்க்லே தெரிவித்துள்ளார்.. இங்கிலாந்தில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் […]

ஐரோப்பா

இத்தாலியில் பார்டோனேச்சியா நகர மக்களை பீதியில் ஆழ்த்திய சேற்று சுனாமி(வீடியோ)

  • August 17, 2023
  • 0 Comments

இத்தாலியின் வடமேற்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. பார்டோனேச்சியா நகரில் ஓடும் மெர்டோவின் நதியில் கடும் வெள்ளப்பெருக்குடன் சேற்று சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். நகரின் நடுவே நதி ஓடுவதால் நதிக்கரையில் இருந்து பொங்கி எழுந்த சேறுடன் கூடிய தண்ணீர் நகரம் முழுவதும் பரவியது. இதனால் நகரம் முழுவதும் சேற்றால் பூசப்பட்டது போன்று காட்சியளித்தது. கனமழை காரணமாக மலைப்பகுதியில் உள்ள ஓடை நிரம்பி, நிலச்சரிவு மற்றும் […]

இலங்கை

10 லட்சத்துடன் வீடு திரும்பிய தொழிலதிபரை காணவில்லை!

மாத்தறை – தெனியாவவில் உள்ள தனியார் வங்கியொன்றில் 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு கொலன்னாவையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் வர்த்தகரின் மனைவி கொலன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவர் பயணித்த வேன் கொலன்ன – பனங்கந்த பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த வர்த்தகர் தொடர்பில் தமக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

மின்சாரத்தை கொள்வனவு செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி!

  • August 17, 2023
  • 0 Comments

6 மாத காலத்திற்கு 100 MW மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (17) அனுமதி வழங்கியுள்ளது. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 முக்கிய நிபந்தனைகளின் கீழ் 2023 ஆகஸ்ட் 18 முதல் 6 மாத காலத்திற்கு மின்சாரம் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறித்த 03 நிபந்தனைகள் வருமாறு, […]

பொழுதுபோக்கு

நான் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன்! பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ..!

நான் இறந்து விட்டதாக ஒரு சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்றும் நான் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சீரியல் நடிகை கல்யாணி ரோஹித் தெரிவித்துள்ளார். ’ஜெயம்’ என்ற திரைப்படத்தில் நாயகி சதா தங்கையாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கல்யாணி . இவர் ‘அள்ளித்தந்த வானம்’, ‘ஸ்ரீ’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரோகித் என்பவரை […]

இலங்கை

தமிழர் பகுதியில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!

  • August 17, 2023
  • 0 Comments

பூவரசம்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாளம்பன்குளம் பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் தவறிவிழுந்து மாணவர்கள் இருவர் மரணமடைந்துள்ளனர். வவுனியா பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் பல பாடசாலைகளுக்கு இடையில் எல்லை போட்​டி வியாழக்கிழமை (17) நடைபெற்றது. அதில் பங்​கேற்க வந்திருந்த பண்டுவஸ்நுவர பிரதேசத்தைச் சேர்ந்த 14 மற்றும் 15 வயதுகளுடைய மாணவர்கள் இருவரே இவ்வாறு மரணித்துள்ளனர். விளையாட்டுப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தில் இருந்து வெளியேறி, சற்று தூரத்தில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போதே, இவ்விருவரும் காலிடறி நீர் நிரம்பிய குழிக்குள் […]

மத்திய கிழக்கு

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து: 63 அகதிகள் பலி

  • August 17, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய பல்வேறு யுக்திகளை கையாளுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்து விடுகிறது. அளவுக்கு அதிகமான பயணிகளுடன் செல்லும் படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழப்பது தொடர் நிகழ்வாக உள்ளது. அந்தவகையில், செனகல் நாட்டைச் சேர்ந்த 63 பேர் ஸ்பெயினின் கேனரி […]

இலங்கை

இலங்கையில் வாழ்க்கைச் செலவு மேலும் குறையும் என அறிவிப்பு!

  • August 17, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் இரண்டாவது தவணையை பெற்றுக்கொள்வது இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் குறித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையான செய்தியை அனுப்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,  ஊழல் ஒழிப்பு, நிதி ஒழுக்கத்தைப் பேணுதல், வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல் உள்ளிட்ட நிதி நிதியத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை […]

வட அமெரிக்கா

‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ள நியூயார்க் அரசு

  • August 17, 2023
  • 0 Comments

நியூயார்க் நகர அரசு, ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது. ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நியூயார்க் சைபர் கிரைம் பொலிஸ் தரப்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், “டிக்டாக், நகரின் தொழில்நுட்ப நெட்வொர்க்குகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என […]

இலங்கை

கட்டுநாயக்காவில் புதிய CCTV கமரா கட்டுப்பாட்டு நிலையத்தை அமைக்குமாறு பணிப்புரை!

  • August 17, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய CCTV கமரா கட்டுப்பாட்டு நிலையத்தை நிறுவுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (17.08)  இடம்பெற்ற கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இந்த கமரா அமைப்பு புதிய தொழில்நுட்ப மென்பொருளைப் பயன்படுத்தி தரவுகளை பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வருகை முனையம் மற்றும் புறப்படும் முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு அதிகாரிகள் […]

You cannot copy content of this page

Skip to content