இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு!

  • December 10, 2023
  • 0 Comments

கடந்த பாராளுமுன்ற தேர்தலின்போது 30வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நடமாடமுடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் யோகநாதன் லிபியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (10.12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணியின்போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் சாணக்கியனின் […]

இலங்கை

இலங்கை தபால் ஊழியர்களின் விசேட அறிவிப்பு!

  • December 10, 2023
  • 0 Comments

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10.12) மாலை 04.00 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் இணை அழைப்பாளர்  சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

  • December 10, 2023
  • 0 Comments

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (10.12) முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் போது, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் […]

இலங்கை

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை கையப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம்!

  • December 10, 2023
  • 0 Comments

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் இன்று காலை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடலளசுவீகரித்தூ வரலாற்று தவறைச் […]

பொழுதுபோக்கு

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அதிர்ச்சியை கிளப்பிய துப்பாக்கி பட வில்லன்..

  • December 10, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் இமாலய மலையில் துறவியை போல ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 43 வயதாகும் வித்யுத் ஜமால் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு ஒட்டி வாழ்வது என்றும் ஆடைகளை துறந்து சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களை போல எந்த சொகுசு வாழ்க்கையும் இல்லாமல் காட்டில் தனிமையில் […]

இலங்கை

இலங்கை அரச ஊழியர்களுக்கான செய்தி!

  • December 10, 2023
  • 0 Comments

அரச அதிகாரிகளுக்கு அடுத்த வருடத்திற்கான விசேட முன்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 4,000 ரூபா முன்பணமாக வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அட்வான்ஸ் தொகை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் திகதி முதல் பிப்ரவரி 29ம் திகதிவரை வழங்கப்பட உள்ளது. திறைசேரியின் உடன்படிக்கையின் பேரில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இது […]

உலகம்

மத்திய டென்னசியில் கடுமையான சூறாவளி : 06 பேர் பலி!

  • December 10, 2023
  • 0 Comments

மத்திய டென்னசியில் வீசிய கடுமையான புயல்கள் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், வீடுகள், வணிக வளாகங்கள் சேதமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் டஜன் கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கென்டக்கி மாநிலக் கோட்டிற்கு அருகிலுள்ள நாஷ்வில்லிக்கு வடக்கே மாண்ட்கோமெரி கவுண்டியில் சூறாவளி தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள நகர மேயர் ஜோ பிட்ஸ், இது பேரழிவு தரும் செய்தி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு

காசாவில் பட்டினியால் வாடும் மக்கள்!

  • December 10, 2023
  • 0 Comments

காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதனை வெளிப்படுத்திய ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர், பத்தில் ஒன்பது பேருக்கு தினசரி உணவு கூட கிடைக்காத நிலை காணப்படுவதாகக் கூறுகிறார். காஸா பகுதிக்கு தேவையான உணவு உதவிகளில் பாதி கூட அதை சென்றடைவதில்லை எனவும், அதற்கு உணவு அனுப்பவே முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலிய தாக்குதல்களால் காஸாவில் 17,700 பேர் இறந்துள்ளனர், அங்கு வசிக்கும் 2.3 மில்லியன் மக்களில் […]

இந்தியா

உத்திரப்பிரதேசத்தில் கோர விபத்தில் சிக்கி குழந்தை உள்ளிட்ட 8 பேர் உடல் கருகி பலி!

  • December 10, 2023
  • 0 Comments

லொரி மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பரெய்லி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று பயணித்துள்ளது.அப்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்த்திசையில் பயணித்த லொரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்ததால் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டதால் ஒரு குழந்தை […]

அறிந்திருக்க வேண்டியவை

அடுத்த வருடம் மக்கள் பயன்படுத்த விரும்பும் வண்ணம் இது தான்

  • December 10, 2023
  • 0 Comments

2024ஆம் ஆண்டில் மக்கள் அதிகம் பயன்படுத்த விரும்பும் வண்ணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய மூன்றும் கலந்த ‘Peach Fuzz’ எனும் நிறம் வண்ணமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த வண்ணம் பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டுமல்ல மனத்துக்கும் இதமளிப்பதாக அமெரிக்காவிலுள்ள Pantone வண்ண நிறுவனம் தெரிவித்தது. Peach Fuzz’ வண்ணம் நல்ல பண்புகளைத் தூண்டி வலிமை, ஆற்றல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மென்மையான உணர்வு, அன்பு, ஒருவர் மற்றவரிடம் காட்ட வேண்டிய கனிவு, பகிர்ந்து வாழ்வதன் அர்த்தம் […]