இந்தியா

இந்தியாவில் புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

  • December 10, 2023
  • 0 Comments

இந்தியாவின் சத்தீஸ்கரில் இடம்பெற்ற கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் ஒன்று ட்ரக் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின் போது, ​​மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மூவர் காரில் இருந்துள்ளனர், மேலும் அவர்கள் ஐந்து பேரும் விபத்தில் இறந்தனர். திருமண வைபவம் முடிந்து வரும் வேளையில் அவர்கள் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இலங்கை

மின்சாரத் தடை தொடர்பில் இருவேறு விசாரணைகள்: இலங்கை மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று ஏற்பட்ட திடீர் மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சு ஆகிய இரண்டும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்மைப்பில் மின்னல் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

பிரபல காமெடி நடிகருக்கு டும் டும் டும்… மணக்கோலத்தில் மனைவியுடன் புதுமாப்பிள்ளை… அரிய புகைப்படங்கள்

  • December 10, 2023
  • 0 Comments

டாக்டர் படம் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி, இப்போது முன்னணி காமெடி நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில், இன்று திருமணம் செய்துகொண்ட ரெடின் கிங்ஸ்லியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. முன்னதாக கோலமாவு கோகிலா, எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், டாக்டர் தான் ரெடின் கிங்ஸ்லியை உச்சத்துக்கு கொண்டுச் சென்றது. இவர் இயக்குநர் நெல்சனின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்யுடன் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிம்புவுடன் […]

இலங்கை

இலங்கை – புத்தளத்தில் மீட்கப்பட்ட பெருமளவிலான தங்கம்!

  • December 10, 2023
  • 0 Comments

புத்தளம் தடாகத்தில் மூழ்கியிருந்த 04 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் தடாகத்தில் பட்டலங்குண்டுவ தீவுக்கு அருகில் உள்ள கடலில் இலங்கை கடற்படையினர்  மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர்,  மற்றும் ஒரு டிங்கி படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஸ்பெயினில் டூத் பிரஷை விழுங்கிய இளம் பெண்ணுக்கு நேர்ந்த நிலை…!

  • December 10, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டை எடுப்பதற்காக இளம்பெண் ஒருவர் டூத் பிரஷை பயன்படுத்திய போது தவறுதலாக அதனை விழுங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஸ்பெயின் – கால்டாகாவோ பகுதியை சேர்ந்த ஹீசியா என்ற இளம் பெண், தனது வீட்டில் வான்கோழியை சமைத்து உட்கொண்டுள்ளார். அப்போது இறைச்சி துண்டு ஒன்று அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டதை அடுத்து அதை எடுக்க அருகில் இருந்த டூத் பிரஷ் கருவியை பயன்படுத்தியுள்ளார்.இருப்பினும், துரதிஷ்டவசமாக ஹீசியா […]

இலங்கை

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு!

  • December 10, 2023
  • 0 Comments

கடந்த பாராளுமுன்ற தேர்தலின்போது 30வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நடமாடமுடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் யோகநாதன் லிபியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று (10.12)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணியின்போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் சாணக்கியனின் […]

இலங்கை

இலங்கை தபால் ஊழியர்களின் விசேட அறிவிப்பு!

  • December 10, 2023
  • 0 Comments

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10.12) மாலை 04.00 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. 27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் இணை அழைப்பாளர்  சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

  • December 10, 2023
  • 0 Comments

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (10.12) முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டத்தின் போது, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் […]

இலங்கை

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தை கையப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக போராட்டம்!

  • December 10, 2023
  • 0 Comments

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி போரட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து பொன்னாலை சந்தியில் இன்று காலை இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன் போது எமது கடல் எமக்கு வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், கடலைச் சுவீகரித்து கடற்தொழிலாளர்களை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதே, எமது கடலை சுவீகரிக்க எவருக்கும் அனுமதியில்லை, ரணில் அரசே எமது கடலளசுவீகரித்தூ வரலாற்று தவறைச் […]

பொழுதுபோக்கு

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் அதிர்ச்சியை கிளப்பிய துப்பாக்கி பட வில்லன்..

  • December 10, 2023
  • 0 Comments

தளபதி விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமால் இமாலய மலையில் துறவியை போல ஒட்டுத்துணிக்கூட இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 43 வயதாகும் வித்யுத் ஜமால் ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் இப்படி இயற்கையோடு ஒட்டி வாழ்வது என்றும் ஆடைகளை துறந்து சர்வைவர் நிகழ்ச்சியில் வரும் போட்டியாளர்களை போல எந்த சொகுசு வாழ்க்கையும் இல்லாமல் காட்டில் தனிமையில் […]