உலகம்

மலேசியாவில் சாலையில் மோதிய விமானம்! 10 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் நெடுஞ்சாலையில் தனியார் ஜெட் விமானம் ஒன்று கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு வாகன ஓட்டிகளுடன் விமானத்தில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர். தாக்கத்தின் போது ஜெட் ஒரு தீப்பந்தமாக வெடித்தது, தளத்தில் இருந்து அடர்ந்த கருப்பு புகை எழும்பியது, காட்சியில் இருந்து வீடியோ கிளிப்புகள் காட்டப்பட்டது. அது லங்காவியின் ரிசார்ட் தீவில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு மேற்கே சிலாங்கூருக்குப் பயணித்த தனியார் ஜெட் […]

ஆசியா

ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்.. 1.5 கோடி மக்கள் உணவின்றி தவிப்பு

  • August 18, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 1.55 கோடி மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி மற்றும் 2 ஆண்டுகளாக […]

இந்தியா

மீண்டும் மணிப்பூரில் வன்முறை ! இளைஞர்கள் மூவர் சுட்டுக்கொலை

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாகை பெரும்பான்மையாகக் கொண்ட உக்ருல் மாவட்டத்தில் உள்ள குக்கி கிராமமான தௌவாய் குகியின் புறநகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்களின் உடல்கள் அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று பேரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து […]

இலங்கை

13 ஆவது திருத்தத்தை எதிர்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உரிமை இல்லை!

  • August 18, 2023
  • 0 Comments

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரட்டைக் கொள்கையை கடைப்பிடித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தார்மீக உரிமை இல்லை. “13வது திருத்தம் இன்னமும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் பெற்று […]

வட அமெரிக்கா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலை அறிவிப்பு

  • August 18, 2023
  • 0 Comments

கனேடிய நகரமொன்றில், காட்டுத்தீ காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகர மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள West Kelowna நகரிலும் Westbank First Nation என்னும் பகுதியிலும் உள்ளூர் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5,500 வீடுகளுக்கு வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், 1,000க்கும் அதிகமான வீடுகளில் வாழும் மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.McDougall Creek பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியேற்ற எச்சரிக்கை […]

இலங்கை

சோளத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு

சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி திருத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி,1 கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. சோளத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

ட்ரம்பிற்கு விஷம் கலந்த கடிதம் அனுப்பிய கனேடிய பெண்.. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

  • August 18, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விசம் கலந்த கடிதமொன்றை அனுப்பி வைத்த கனடிய பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு 22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 56 வயதான பெஸ்கெல் ஃபெரியர் என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.கடந்த 2020ம் ஆண்டில் கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். வீட்டில் தயாரிக்கப்பட்ட விச வகையொன்றை தூவி, டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

வரவர அழகு கூடுதே… சுண்டி இழுக்கும் இலங்கைப் பெண் ஜனனியின் புதிய புகைப்படங்கள்…

  • August 18, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர். அன்பு, காதல், பாசம், சண்டை என அனைத்தையும் இந்த ஒரே நிகழ்ச்சியில் நம்மால் பார்க்க முடியும். இதுவரை 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பலர் சினிமாவில் தங்களுக்கான இடத்தை பிடித்து வெற்றியாளர்களாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சீசன் 6ல் கலந்துகொண்டு அதிக அளவிலான ரசிகர்களை பெற்ற ஜனனி தற்போது விதவிதமான புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் […]

இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கி

நேற்றைய தினத்தை விட இன்று (ஆகஸ்ட் 18) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 314.78 முதல் ரூ. 316.28 ஆகவும், விற்பனை விலை ரூ. 327.87 முதல் ரூ. 329.49 ஆகவும் பதிவாகியுள்ளது. வளைகுடா நாட்டு கரன்சிகள் உட்பட வெளிநாட்டு கரன்சிகளுக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

“மாமன்னன்” திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்….

  • August 18, 2023
  • 0 Comments

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் மாமன்னன். மக்களின் பேராதரவால் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம் திரையரங்குகளில் 50வது நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று பிரமாண்ட விழா நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப […]

You cannot copy content of this page

Skip to content