இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்
2021-2022 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில், இந்நாட்டில் 35 வயதுக்குட்பட்ட சனத்தொகையில் 15% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, இந்நாட்டின் சனத்தொகையில் 35% பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு இறப்புகளில் 80% தொற்று அல்லாத நோய்கள் மற்றும் அவற்றின் சிக்கல்களால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களின் உடல் நலன் பிரிவு திறப்பு விழா நிகழ்விலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.