இலங்கை

இலங்கையில் முட்டை விலை உயர்வு : வர்த்தக அமைச்சர் அதிரடி உத்தரவு!

  • December 16, 2023
  • 0 Comments

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி எதிர்காலத்தில் ஒரு முட்டை வாடிக்கையாளருக்கு 35 ரூபாய் விலையில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சந்தையில் முட்டையின் விலை அசாதாரணமாக அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். […]

வட அமெரிக்கா

விரக்கிதியல் சொந்த பிள்ளைகளை கொன்ற கனடிய இளம் தாய்!

  • December 16, 2023
  • 0 Comments

கனடாவில் தன் சொந்த பிள்ளைகளை கொன்றதாக இளம் தாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதான கோஸ்டா கொலியாஸ் என்ற பெண் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நான்கு மற்றும் ஐந்து வயதான இரண்டு ஆண் குழந்தைகளை இந்தப் பெண் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பொலிஸாருக்கு கிடைக்க தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. […]

இந்தியா

ஹரியாணாவில் அதிர்ச்சி!! தாயை கொன்று சூட்கேசில் வைத்து ரயில் ஏறிய மகன்

  • December 16, 2023
  • 0 Comments

ஹரியாணாவில் ரூ.5 ஆயிரம் பணம் தர மறுத்த தாயை மகன் கொலை செய்தார். பின்னர் சடலத்தை சூட்கேசில் அடைத்து, உத்தரபிரதேசத்துக்கு ரயிலில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹரியாணா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹிமான்ஷூ. இவர் கடந்த 13ம் திகதி அன்று தனது தாய் பிரதீமா தேவியிடம் (42) ரூ.5 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்ததால், தாய்க்கும் மகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஹிமான்ஷூ, […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

  • December 16, 2023
  • 0 Comments

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கன்னாலியா மற்றும் சிங்கராஜா வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களை பார்வையிடும் போது கூடுமானவரை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அருவிகளை சுற்றியுள்ள மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் குறுகிய காலத்தில் பெய்த கனமழையால் அருவிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர்வரத்து உடனடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, குளிக்கும் போதும், இறங்கும் போதும், அருவிகளுடன் இணைந்திருக்கும் போதும் கூடுமானவரை கவனமாக இருப்பது மிகவும் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிகள் […]

இலங்கை

இலங்கையில் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை!

  • December 16, 2023
  • 0 Comments

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  திரான் அலஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார். அம்பலாங்கொடையில் இன்று (16.12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”இந்த வேலையில் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். முதலாளி என்ன பேசினாலும் போதைப்பொருள் வியாபாரிகளை காப்பாற்ற விடமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கையில் குழந்தைகள், பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

  • December 16, 2023
  • 0 Comments

தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள் இன்று சந்தையை ஆக்கிரமித்துள்ளன. பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் மை பூசப்பட்டதாகவும், கிராஃபைட் அல்லது வண்ண பென்சில் குச்சிகள் தரமானதாக இல்லை என்றும், இதனால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் […]

ஐரோப்பா

ரஷ்யர்களிடம் மன்னிப்பு கேட்ட அதிபர் புதின்.. வெளியான காரணம் !

  • December 16, 2023
  • 0 Comments

ரஷ்ய அதிபர் புதின் வருடத்தின் இறுதியில் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாக உரையாடுவது வழக்கம். அவ்வகையில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புதின், தன்னிடம் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பென்சன் வாங்கும் முதியவர் ஒருவர் புதினிடம் முட்டை விலை, கோழி இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார். பென்சன் வாங்கும் முதியவர் இப்படி தெரிவித்ததால் உடனடியாக மன்னிப்பு கேட்டார் புதின். “இந்த விலை உயர்வுக்காக நான் […]

இலங்கை

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு மாறும் இலங்கை!

  • December 16, 2023
  • 0 Comments

புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அட்டையில் கைவிரல் அடையாளம், குருதி வகை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் உள்ளடக்கப்பட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு 76 சுய விபரங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 முக்கிய விடயங்கள் மட்டுமே கோரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி பெயர், முகவரி, பிறந்த திகதி, […]

ஐரோப்பா

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  • December 16, 2023
  • 0 Comments

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தலைநகர் கீவ் நகரில் பொருட்காட்சி அமைக்கப்பட்டு அங்கு ஜெயின்ட் வீல், ராட்டினம் போன்ற கேளிக்கை விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. ரஷ்யா உடனான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர்கள் உருவப்படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் போரில் சேதம் அடைந்த டாங்கிகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களையும் மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதனிடையே காதல் ஜோடிகளும் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

பொழுதுபோக்கு

ஃபைட் கிளப் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

  • December 16, 2023
  • 0 Comments

உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் விஜய் குமார். இவர் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் ஃபைட் கிளப். அறிமுக இயக்குனரான அப்பாஸ் இப்படத்தை இயக்க ஆதித்யா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார் மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G Squad நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் குமார் நடிப்பில் […]