ஐரோப்பா

”உக்ரைனில் வெற்றி பெற்றால் நேட்டோ நாட்டை தாக்கும் ரஷ்யா” : புடின் கடும் கண்டனம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் வெற்றி பெற்றால் நேட்டோ நாட்டை தாக்கும் ரஷ்யா என்ற அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் கருத்து ‘முழு முட்டாள்தனம்’ என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக புடின் வெற்றி பெற்றால், நேட்டோ நாட்டை ரஷ்யா தாக்கும் என்று ஜோ பைடென் இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்தார் இந்நிலையில் நேட்டோ நாடுகளுடன் போரிட ரஷ்யாவுக்கு எந்த காரணமும் இல்லை, எந்த ஆர்வமும் இல்லை – புவிசார் அரசியல் ஆர்வம் இல்லை, பொருளாதாரம், […]

இந்தியா

மகாராஷ்டிரா- வெடிமருந்து ஆலையில் வெடிவிபத்து… 9 பேர் உடல் சிதறி பலி!

  • December 17, 2023
  • 0 Comments

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள வெடி மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாக்பூர் அருகே பசார்கான் கிராமத்தில் உள்ள சோலார் காஸ்ட் பூஸ்டர் ஆலையில் இன்று காலை பேக்கிங் செய்யும்போது திடீரென தீப்பற்றி அதன் மூலம் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற நாக்பூர் (கிராமப்புற) காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் போதார் தலைமையிலான பொலிஸாரும், உள்ளூர் தீயணைப்பு படையினரும் தீயை அணைக்கும் […]

பொழுதுபோக்கு

பிரபுவின் வீட்டில் விஷேசம்… நேரில் சந்தித்து வாழ்த்திய சூர்யா

  • December 17, 2023
  • 0 Comments

திரைத்துறையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் சமீபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த வகையில், திருமணத்திற்கு செல்ல முடியாத நடிகர் சூர்யா மணமக்களை அவர்களது வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார். நடிகர் பிரபு வீட்டில் ஆதிக்-ஐஸ்வர்யா தம்பதியை சந்தித்த நடிகர் சூர்யா மணமக்களை வாழ்த்தினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. […]

ஆசியா

முகக்கவசம் அணியவேண்டும்… சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை!

  • December 17, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி அந்நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் இரண்டு ஆண்டுகள் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று […]

இலங்கை

இலங்கையில் சில பகுதிகளில் வாழும் மக்களுக்கு அம்பர் எச்சரிக்கை!

  • December 17, 2023
  • 0 Comments

கடும் மழையுடன் மல்வத்து ஓயாவின் இரு கரைகளிலும் உள்ள தாழ்நில மக்களுக்கு அம்பர் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தந்திரிமலை தொடக்கம் தாழ்வான பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் வெங்கலவெடிக்குளம், மடு, முசலை, நானாட்டான் ஆகிய பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், அவ்வழியாக வாகனங்களை ஓட்டிச் செல்பவர்களும் வெள்ள அபாயம் தொடர்பில் […]

இலங்கை

இலங்கையில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் : 83 பேர் கைது!

  • December 17, 2023
  • 0 Comments

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (17.12) பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று ஒரேநாளில்  83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரன் அலஸ் தெரிவித்துள்ளார். இந்த சந்தேக நபர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வருபவர்கள் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை அரசியல் களத்தில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

  • December 17, 2023
  • 0 Comments

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு இந்த குழுவினர் பாராளுமன்றத்திற்கு தெரிவானதாகவும் அவர் கூறினார். இந்த குழுவுடன் கூட்டு எதிர்க்கட்சியாகவும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டமைப்பாகவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக  சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்துவது […]

இலங்கை

இலங்கை சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!

  • December 17, 2023
  • 0 Comments

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு நெடுஞ்சாலை தகவல் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, போக்குவரத்தில் 50 மீட்டர் இடைவெளி வைத்திருப்பது மிகவும் முக்கியம். முன்பக்க விளக்குகளை எரிய வைத்து வாகனம் ஓட்டுவது மிகவும் முக்கியம் என வாகன ஓட்டிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, சாதாரண வீதியின் பிரதான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கினால், வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர். குறிப்பாக அறிமுகமில்லாத சாலைகளில் வாகனம் ஓட்டும்போது […]

இலங்கை

இலங்கையில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு!

  • December 17, 2023
  • 0 Comments

அடுத்த வாரம் முதல் வெங்காயத்தின் விலை குறையும் என வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நாட்டில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வெங்காயத்திற்கு பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஐரோப்பா

அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கும் விளாடிமிர் புதின்!

  • December 17, 2023
  • 0 Comments

ரஷ்யாவில் வரும் மாா்ச் மாதம் நடைபெறவிருக்கும் அதிபா் தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ராய்ட்டா்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யாவில் வரும் மாா்ச் 17ம் திகதி நடைபெறவிருக்கும் அதிபா் தோதலில் தற்போதைய அதிபா் விளாடிமிர் புதின் ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சியின் சாா்பில் போட்டியிடப்போவதில்லை. அவருக்கு அந்தக் கட்சி முழு ஆதரவு அளித்தாலும், அவா் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிடவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின என்று அந்தச் […]