இலங்கை

இலங்கை- நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை – சிக்கிய 83 பேர்

  • December 17, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் பொலிஸாரின் விசேட நடவடிக்கைகளின் போது 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்ககை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். அந்த நடவடிக்கையின் விளைவாக, குறித்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களில் 45 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தயார் நிலையில் வைத்துள்ள ரஷ்யா!

  • December 17, 2023
  • 0 Comments

மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள கலுகா பிராந்தியத்தில் உள்ள கோசெல்ஸ்க் தளத்தில் ரஷ்ய ராக்கெட் படைகள் புதிய Yars எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 23-மீட்டர் நீளமுள்ள RS-24 (Yars) ஏவுகணையானது, பல்வேறு இலக்குகளில் பல அணு ஆயுதங்களை கொண்டு தாக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் “கோசெல்ஸ்கி வளாகத்தில், மூலோபாய ஏவுகணைப் படைகள் Yars கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஒரு சிலோ லாஞ்சரில் ஏற்றியது” என்று பாதுகாப்பு […]

ஆசியா

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்று மொத்த வீட்டையும் எரித்த ஜப்பானியர்!

  • December 17, 2023
  • 0 Comments

ஜப்பானில் உள்ள வீடு ஒன்றில் கரப்பான் பூச்சியை கொல்ல நபர் ஒருவர் அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லி தெளிப்பானை பயன்படுத்திய போதே வீடு தீப்பற்றியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் குறித்த வீட்டில் வசித்த இருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலியா

குயின்ஸ்லாந்தில் கொட்டித்தீர்த்த கனமழை;ஆயிரக்கணக்கானோரை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தல்

  • December 17, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் மிக அதிகமான மழைப்பொழிவு காரணமாக பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நகரின் புறநகர் பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் கெய்ர்ன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 600 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளது, மேலும் 500 மி.மீ மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, அவுஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், […]

ஆசியா

காசாவில் முடங்கும் மருத்துவமனைகள் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாலில் அவசர சிகிச்சைப் பிரிவு முடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மைதானங்களை தங்குமிடத்திற்கு பயன்படுத்துகின்றனர் என்றும், குடிநீர் மற்றும் உணவுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துளளது. எரிபொருள், ஆக்ஸிஜன் மற்றும் பிற பொருட்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுளளது.

உலகம்

நான் மீண்டும் ஜனாதிபதியானால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் : டொனால்ட் ட்ரம்ப்!

  • December 17, 2023
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதால், தான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என தெரிவித்துள்ளார். 2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணியில் இருப்பவர் நியூ ஹாம்ப்ஷயரில் நடந்த பேரணியில், அவர் மீண்டும் பதவியேற்றால் சில அமெரிக்கர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவார்கள் என்று கூறினார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் வெற்றி பெற்றவுடன், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும், […]

ஆசியா

தைவானில் இளம்பெண்னின் சிறுநீரகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ள 300 கற்கள்..!

  • December 17, 2023
  • 0 Comments

தைவானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தைவானில் சியோ பு என்ற 20 வயது இளம்பெண்ணுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து அவரது சிறுநீரகத்தில் இருந்து சுமார் 300 கற்கள் அகற்றப்பட்டுள்ளன. சியோ பு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லாதவராக இருந்துள்ளார்.குறித்த பெண் தாகம் எடுத்தால் கூட தண்ணீருக்கு பதிலாக பபிள் டீ (Bubble Tea) எனப்படும் டீ வகையை மட்டுமே அதிகமாக பருகி வந்துள்ளார். அதனால் கழிவுகளை […]

பொழுதுபோக்கு

கட்டுப்படுத்த முடியாத வெற்றி: அனிமல் 16வது நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

  • December 17, 2023
  • 0 Comments

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்தது. […]

இலங்கை

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்ட பீடங்களின் கற்கைகள் மீள ஆரம்பம்!

களனி பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கற்கைகள் நாளை (18) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மனிதவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடங்களின் கற்கைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ளதாக உபவேந்தர் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இரவு இடைவேளை அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து களனி பல்கலைக்கழகம் கடந்த 5 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக […]

இலங்கை

மட்டக்களப்பில் தனியாருக்கு சொந்தமான பஸ்வண்டியில் மோதி சிறுவன் உயிரிழப்பு

  • December 17, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதானவீதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் (16) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். தாய், யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போது, தாயை எதிர்பார்த்து பஸ்தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன் , தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு […]