தீவிரமடையும் இஸ்ரேல் போர்; பிறந்த 17 நாட்களில் பலியான பெண் குழந்தை!
காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் பிறந்து 17 நாளேயான பெண் குழந்தை ஒன்று, தனக்கான பெயரைச் சூடுவதற்கு முன்னரே போருக்கு பலியாகி இருக்கிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் போராளிகளை வேட்டையாடும் பெயரில், அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.ஹமாஸ் அமைப்பினர் மறைந்திருப்பதாக கூறி, அகதிகள் முகாம், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிக்கூடங்களை எல்லாம் இஸ்ரேல் தகர்த்து வருகிறது. மின்சாரம், குடிநீர் சேவைகள் துண்டிக்கப்பட்டு உயிர் தப்பிய காசா மக்களும் நடை பிணமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் […]