இலங்கை

இலங்கையின் ஏற்றுமதியில் முன்னேற்றம்!

  • August 29, 2023
  • 0 Comments

சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் சரக்கு ஏற்றுமதி ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, ​​ஜூலை மாதத்தில் இலங்கை வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 1027.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது 2.18 வீத அதிகரிப்பு என இலங்கை சுங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலையில் பதிவான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 11.79 சதவீதம் […]

ஐரோப்பா

முதன்முறையாக இந்தியா செல்லவுள்ள பிரதமர் ரிஷி: வெடித்துள்ள சர்ச்சைகள்

  • August 29, 2023
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், G20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்கிறார். இந்த தகவல் வெளியானதுமே கூடவே சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. தற்போது, 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.இந்தியா சார்பில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான பியுஷ் கோயல், பிரித்தானியா சார்பில் பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனாக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று […]

இலங்கை

LP எரிவாயு விநியோகம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

  • August 29, 2023
  • 0 Comments

எதிர்வரும் வருடத்திற்கான LP எரிவாயு விநியோக ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தில் 50%ஐ தற்போதைய விநியோகஸ்தரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு  ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்கு 280,000 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயு விநியோகிப்பதற்கான கால ஒப்பந்தம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டுக்கான எல்பி எரிவாயு விநியோகத்திற்கான ஏலம் கோரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது […]

பொழுதுபோக்கு

எங்கும் Vibe செய்யும் உருளைக்கிழங்கு செல்ல குட்டி.. பாடியது யார் தெரியுமா? வீடியோ….

  • August 29, 2023
  • 0 Comments

உருளைக்கிழங்கு செல்லக்குட்டி என்ற பாடல் கடந்த சில காலமாகவே வெகுஜன மக்களால் விரும்பப்பட்ட வருகின்றது, இது குழந்தை பாடல் என்றாலும், மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது. குறிப்பாக மீம் creatersகளுக்கு இது பெரு லேட்டஸ்ட் ட்ரெண்டிங்காக மாறியுள்ளது என்று தான் கூறவேண்டும். சரி இந்த குழந்தைகள் பாடலை பாடியது யார் தெரியுமா? இவரும் ஒரு பாடகர் தான், அவர் பெயர் மது சௌந்தர், பாடகியும் மற்றும் இன்ஸ்டாகிராம் influencerமான மது தன் குரலில் ஒலித்த இந்த உருளைக்கிழங்கு […]

ஆசியா

ஈராக்கில் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மூவருக்கு தூக்கு!

  • August 29, 2023
  • 0 Comments

கடந்த 2016 ஆம் ஆண்டு ஈராக்கின் பக்தாத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடைய மூவர் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், அவர்கள் எப்போது கொல்லப்பட்டனர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இலங்கை

மன்னார்-இருவர் சுட்டுக் கொலை தொடர்பாக பிரதான சந்தேக நபரை தேடுதல் பணியில் விசேட அதிரடிப் படையினர்

  • August 29, 2023
  • 0 Comments

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்யும் வகையில் மன்னார் மூர்வீதி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் இடம் பெற்றுள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதி உள்ளடங்களாக அப்பகுதியில் உள்ள […]

ஆசியா

இந்தோவில் ஹிஜாப் சரியாக அணியாத்தால் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை – ஆசிரியர் சஸ்பெண்ட்!

  • August 29, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் பிரதான தீவான கிழக்கு ஜாவா தீவில் உள்ளது லாமங்கன் நகரம். இங்குள்ள அரசு ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் சிலர் ஹிஜாப் முக்காடுகளை சரியாக அணியாமல் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் ஆசிரியர் தண்டனை வழங்கியிருக்கிறார். 14 மாணவிகளின் தலைமுடியை பாதி அளவுக்கு ஷேவ் செய்துள்ளார். இதனால் மாணவிகள் அவமானத்தில் கூனிக்குறுகினர். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. […]

இலங்கை

மன்னாரில் பயறு அமோக விளைச்சல் ;நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் காதர் மஸ்தான்

  • August 29, 2023
  • 0 Comments

விவசாய செய்கை மூலம் சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை ஒன்றை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சினாலும், மாகாண குறித் தொதுக்கப்பட்ட நிதியத்தின் மூலமும் மற்றும் காம காரர்கள் சொந்த பணத்திலும் விவசாயிகளுக்கு பயறு நடுகைக்கான பொருட்கள் வழங்கப்பட்டு மன்னார் மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் சுமார் 1600 ஹெக்டயர் நிலப்பரப்பில் கட்டுக்கரை குளத்தின் கீழ் உள்ள நெல் வாயில்களில் மாற்றுப்பயிராக பயறு பயிரிடப் பட்டிருந்தது. குறித்த பயிர் செய்கையின் அறுவடையை கிராமிய பொருளாதார இராஜாங்க […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

வானில் தோன்றும் நெருப்பு வளையம் : லைவ் டெலிகாட்ஸ் செய்ய தயாராகும் நாசா!

  • August 29, 2023
  • 0 Comments

அக்டோபர் மாதத்தில் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் சூரிய கிரகணத்தை அமெரிக்கா வாழ் மக்களால் பார்வையிட முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது குறித்து ஓ (டுவிட்டர்) இல் பதிவிட்டுள்ள நாசா இந்த சூரிய கிரகணம் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி தோன்றும் என அறிவித்துள்ளது. இந்த அற்புதமான இயற்கை நிகழ்விற்கு நாசா ‘நெருப்பு வளையம்’ கிரகணம் எனப் பெயரிட்டுள்ளது. இந்த கிரகணம் வடக்கே ஓரிகானில் இருந்து தெற்கே டெக்சாஸ் நகருக்கு நகரும் எனவும் மக்கள் […]

ஐரோப்பா

லண்டனில் கலாசார திருவிழா: போதைப்பொருளுடன் 85 பேர் கைது

  • August 29, 2023
  • 0 Comments

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இது கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கவுரவிப்பதற்காக ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த திருவிழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முதல் நாளான நேற்று கண்கவர் உடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடினர். அதேசமயம் […]

You cannot copy content of this page

Skip to content