ஐரோப்பா

பிரான்ஸில் உரிமையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த வளர்ப்பு நாய்

  • January 1, 2024
  • 0 Comments

பிரான்ஸில் வளர்ப்பு நாய் ஒன்று மேற்கொண்ட கோரத்தாக்குதலில் அதன் உரிமையாளர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Rottweiler வளர்ப்பு நாய் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அதன் உரிமையாளரை தாக்கியுள்ளது. பொலிஸார் அழைக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அவர்கள் சென்றடைந்த போது நிலமை கைமீறிச் சென்றிருந்தது. வயது குறிப்பிடப்படாத நபர் ஒருவரின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடித்து குதறியதில் அவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்துள்ளார். அவர் உயிரிழந்தவரின் தாயார் என அறிய […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வதிவிட விசா பெற்று குடும்பத்தினரை அழைக்கும் வெளிநாட்டவர்கள்

  • January 1, 2024
  • 0 Comments

ஜெர்மன் நாட்டுக்கு அகதிகள் வருவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டுக்கு வந்து அகதி விண்ணப்பம் மேற்கொண்ட அகதிகள் மனிதாபிமாக அடிப்படையில் அகதிகளாக அங்கிகரிக்கப்பட்டு அவர்கள் இந்த நாட்டிலே வதிவிட விசாவை பெற்று இருந்தால் அவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை நாட்டுக்கு வரவழைப்பதற்காக விண்ணப்பங்களை மேற்கொள்கின்றார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு இவ்வாறு மனிதபிமான அடிப்படையில் விசாவை பெற்றவர்கள் தங்களது குடும்பங்களை இந்த நாட்டுக்கு வரவழைப்பது அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. அதாவது ஜெர்மனியின் ஆளும் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மருந்தகங்களை நாடும் நோயாளிகள்

  • January 1, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் COVID-19 தொற்று அதிகரித்துள்ளதால் பலர் மருந்தகங்களை நாடுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். WhiteCoat போன்ற தொலைச் சுகாதாரச் சேவைகளையும் பலர் நாடுகின்றனர். நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாய் WhiteCoat மருந்தகத்தின் மூத்த மருத்துவ இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் முதல் அதிகரிக்கத் தொடங்கிய நோயாளிகள் எண்ணிக்கை, படிப்படியாக உச்சத்தைத் தொட்டிருப்பதாக அவர் கூறினார். Doctor Anywhere இணையச் சேவையும் நோயாளிகள் எண்ணிக்கை இரட்டித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதனால் அவசரமற்ற பொது மருத்துவச் சேவைகளை பின்னொரு தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாக மருந்தகம் குறிப்பிடப்படுகின்றது. […]

இலங்கை

ரணிலின் அடுத்தக்கட்ட அரசியல் திட்டம் அம்பலம்

  • January 1, 2024
  • 0 Comments

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகின்றார். அரசியல் வட்டார தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும், ஜனவரி மாதம் சிறு கட்சிகளுடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவு வழங்குமாறும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்காது, தமது […]

உலகம் செய்தி

செங்கடலில் வர்த்தக கப்பல் மீது தாக்குதல்!! அமெரிக்கா கொடுத்த அதிரடி பதிலடி

  • December 31, 2023
  • 0 Comments

செங்கடலில் வர்த்தக கப்பலில் ஏற முயன்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும், அமெரிக்க கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல்களால் கிளர்ச்சியாளர்களின் சிறிய படகுகள் அழிக்கப்பட்டதாக பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது. குறித்த கப்பல் ஏமனின் ஹூதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பயணித்ததாகக் கூறப்படுகிறது. நவம்பர் மாதம் முதல் செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது இந்தக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சண்டைக்குப் பதிலடியாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் மீன்பிடி படகுகளுக்கு தீ வைப்பு

  • December 31, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதி பாலயடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மீன்பிடி படகுகள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பாலயடி பகுதி மீனவர்கள் கடலில் இருந்து வந்து நிறுத்திவிட்டு வீடுகளுக்குச் சென்றதை அடுத்து சிலர் இரண்டு படகுகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். தீயினால் ஒரு படகு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் மற்றுமொரு படகு பகுதியளவிலும் எரிந்து நாசமாகியுள்ளது. எவ்வாறாயினும் தீயினால் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு படகுகளும் பழுதுபார்க்க […]

ஆப்பிரிக்கா செய்தி

கென்யாவில் உகாண்டா தடகள வீரர் கத்தியால் குத்தி கொலை

  • December 31, 2023
  • 0 Comments

மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் உகாண்டாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெஞ்சமின் கிப்லாகாட், கென்யாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கத்தியால் குத்தப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. 34 வயதான கிப்லாகாட், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் அரையிறுதிக்கு முன்னேறினார். விளையாட்டு வீரர்களுக்கான சிறந்த பயிற்சி மையமாக அறியப்படும் கென்யாவின் எல்டோரெட் நகருக்கு அருகில், அவரது மார்பு மற்றும் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் காரில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது மரணம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கென்ய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிப்லகட்டின் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பலத்த பாதுகாப்பு

  • December 31, 2023
  • 0 Comments

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்று வரும் இராணுவ மோதல்கள் காரணமாக பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கொலோன் நகரில் உள்ள தேவாலயத்தை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிசார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பெர்லினில் பாதுகாப்பை பலப்படுத்த ஜெர்மனி அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. […]

இலங்கை செய்தி

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

  • December 31, 2023
  • 0 Comments

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாளை முதல் வற் வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பேக்கரி தொழில் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தித்து பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என தீர்மானித்ததாக தலைவர் தெரிவித்தார். மேலும் […]

ஐரோப்பா செய்தி

சுற்றுலா குழுக்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை தடை செய்யும் வெனிஸ்

  • December 31, 2023
  • 0 Comments

இத்தாலிய நகரத்தில் வெகுஜன சுற்றுலாவின் தாக்கத்தை எளிதாக்கும் முயற்சியில், வெனிஸ் ஒலிபெருக்கிகள் மற்றும் 25 பேருக்கும் அதிகமான சுற்றுலாக் குழுக்களை தடை செய்ய உள்ளது. இந்த புதிய விதிகள் ஜூன் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒலிபெருக்கிகள் “குழப்பம் மற்றும் இடையூறுகளை உருவாக்கும்” என்பதால் அவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் அதிகம் பார்வையிடப்பட்ட இடங்களில் ஒன்றான கால்வாய் நகரத்தின் அவசரப் பிரச்சினையாக அதிக சுற்றுலா பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நகரின் பாதுகாப்பிற்கு […]