இந்தியா

போட்டோ ஷூட் எடுக்க பெற்றோர் எதிர்ப்பு… BBA மாணவி எடுத்த விபரீத முடிவு!

  • January 1, 2024
  • 0 Comments

மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் மின்விசியில் BBA மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதாநகரைச் சேர்ந்தவர் வர்ஷினி(21). இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் வர்ஷினி, BBA படித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தனது பெற்றோரிடம், வர்ஷினி நேற்று அனுமதி கேட்டார். ஆனால், மாலில் போட்டோ ஷூட்டுக்கு […]

ஐரோப்பா

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்த திட்டமிடும் பிரிட்டன்!

  • January 1, 2024
  • 0 Comments

நேட்டோ நாடான பிரிட்டன் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்த பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதல்களை தடுக்க நேரடி நடவடிக்கை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்தார். யேமன் குழுவிற்கு இறுதி எச்சரிக்கையை விடுக்க ஐக்கிய இராச்சியமும் அமெரிக்காவும் ஒரு கூட்டு அறிக்கையைத் தயாரிக்கின்றன என்ற செய்திகளுக்கு மத்தியில் இது வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

  • January 1, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லண்டனில் ப்ரிம்ரோஸ் மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டு வருகைக்காக அனைவரும் காத்து இருந்த அந்த வேளையில், 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு இரவு 11.40 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் வரும் வரை சிறுவனுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.ஆனால் துரதிஷ்டவசமாக […]

உலகம்

காஸாவிலிருந்து சில படைகளை திரும்பப் பெரும் இஸ்ரேல்

ஹமாஸுக்கு எதிரான மேலும் இலக்கு நடவடிக்கைகளுக்கு மாறுவதற்காக காசாவில் இருந்து சில படைகளை இஸ்ரேல் திரும்பப் பெறுகிறது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். திரும்பப் பெறுவது முன்பதிவு செய்பவர்கள் மீது கவனம் செலுத்துவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். திரும்பப் பெறுவது முன்பதிவு செய்பவர்கள் மீது கவனம் செலுத்துவதாக அந்த அதிகாரி கூறியுள்ளார். அதில் இஸ்ரேல் 300,000 போருக்காக வரைவு செய்தது – மேலும் “இஸ்ரேலிய பொருளாதாரத்தை மீண்டும் உற்சாகப்படுத்த” வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசியா

ஒன்றரை மணி நேரத்தில் 21 நிலநடுக்கம்… சுனாமி அச்சத்தால் பாதுகாப்பான இடங்களுக்கு ஜப்பானியர்கள் ஓட்டம்

  • January 1, 2024
  • 0 Comments

ரிக்டர் ஸ்கேலில் 4.0 என்பதற்கும் மேலான நிலநடுக்கங்களில், ஒன்றரை மணி நேரத்தில் 21 முறை நேரிட்டதில் ஜப்பான் கதிகலங்கிப் போயுள்ளது. ஜப்பானை இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாதித்ததில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நண்பகல் 12.40 மணியளவில் ஜப்பானின் மேற்கு கடலோரத்தில் தொடர் நில நடுக்கங்கள் அடையாளம் காணப்பட்டன. ரிக்டர் ஸ்கேலில் அதிகபட்சமாக 7.6 என்றளவில் நிலநடுக்கம் தென்பட்டதில் அங்கே உச்சபட்ச எச்சரிக்கையை அரசு அறிவித்துள்ளது ஹோன்ஷு பகுதியில் சுமார் 13 கிமீ […]

தமிழ்நாடு

புத்தாண்டு பொண்டாட்டத்தின் போது நேர்ந்த விபரீதம்… பொலிஸ் துரத்தியதால் கிணற்றில் குதித்த சிறுவன் மரணம்!

  • January 1, 2024
  • 0 Comments

பண்ருட்டி அருகே நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொலிஸ் துரத்தியதால் பயந்து ஓடிய மாணவர்களில் இருவர் கிணற்றில் விழுந்தனர். அதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் உயிரிழந்த நிலையில், மற்றொரு சிறுவன் காயத்துடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்திய நிலையில் கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அருகில் உள்ள காட்டுவேகாகொள்ளை கிராமத்தில் மாணவர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் […]

ஆசியா

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து அவசரகால தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்!

  • January 1, 2024
  • 0 Comments

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு மாத்திரமல்லாது தென்கொரியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும் குறித்த எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசரகால கட்டுப்பாட்டு அறையை அமைத்து இந்திய குடிமக்களுக்கு ஹெல்ப்லைன் எண்களை வழங்கியது. தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. The emergency helpline numbers are: +81-80-3930-1715 (Mr. Yakub Topno) +81-70-1492-0049 (Mr. Ajay Sethi) +81-80-3214-4734 (Mr. D.N.Barnwal) +81-80-6229-5382 […]

இலங்கை

புத்தளம் வைத்தியசாலையில் வயிற்றில் கத்தியுடன் இளைஞன் அனுமதி!!

  • January 1, 2024
  • 0 Comments

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்கச்​ சென்ற இளைஞன் மீது கத்தியால் குத்தியதில், அக்கத்தி வயிற்றில் சிக்கிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் இளைஞன் இன்று (1) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புத்தளம் மஸ்ஜிதில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் கத்தியால் தாக்கப்பட்ட 20 வயது இளைஞன் கூறுகையில், மோதலை தவிர்க்க முயன்ற போது, ​​ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் இருந்து கத்தியால் குத்தியதாக தெரிவித்தார். கத்திக்குத்துக்கு இலக்கான […]

இலங்கை

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு!

  • January 1, 2024
  • 0 Comments

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்த விலைத்திருத்தம் இன்று (01.01.2024) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி  12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 4,740 ரூபாயாகும். அதேபோல்  5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை 305 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1,900 ரூபாயாகும்.

ஐரோப்பா

ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் ஜப்பானுக்கு அருகிலுள்ள ரஷ்யாவின் சகாலின் தீவு மற்றும் பசிபிக் நகரமான விளாடிவோஸ்டாக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சகாலினில் அவசர சேவைகள் “சுனாமி எச்சரிக்கை” அறிவித்தது, தீவின் மேற்கு கடற்கரை “சுனாமி அலைகளால் பாதிக்கப்படலாம்” என்று அறிவித்துள்ளது. விளாடிவோஸ்டாக்கில் உள்ள நகர அதிகாரிகளும் எச்சரிக்கையை அறிவித்து மீனவர்களை “அவசரமாக கரைக்கு திரும்ப” உத்தரவிட்டனர்.