இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

  • September 2, 2023
  • 0 Comments

இலங்கையில் அனைத்து மக்களினதும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்காக சமூக நீர்வழங்கல் திட்டங்களின் நிர்மாணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இதனை தெரிவித்தார். அந்தவகையில், நாடளாவிய ரீதியில் குடிநீர்த் தேவையில் 62% சதவீதத்தைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மொத்த குடிநீர்த் தேவையில் 85% சதவீத நீர் வழங்கல் இலக்கைப் பூர்த்தி செய்வதற்கு அமைச்சு செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். தற்போது நிலவும் பொருளாதார […]

செய்தி

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய -பாகிஸ்தான் போட்டி இன்று

  • September 2, 2023
  • 0 Comments

ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரில் கண்டி – பல்லேகலையில் இன்று இடம்பெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கிரிக்கட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஷஸ் கிண்ண டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கு இணையாக உலக கிரிக்கட் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திகழ்கின்றது. இறுதி ஆட்டத்துக்கு இணையான பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி, இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. உபாதையில் இருந்து குணமடைந்து […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பெரும் பணக்காரர் காலமானார்

  • September 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் பெரும் பணக்காரரான எகிப்து தொழிலதிபர் மொஹமட் அல் ஃபயீத் கடந்த 30ஆம் திகதி காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 94 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டிரியாவின் தெருக்களில் பானங்கள் விற்பனை செய்வதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் பிரித்தானியாவின் பணக்காரர் ஆனார். ஃபுல்ஹாம் கால்பந்து கிளப்பின் முன்னாள் உரிமையாளராக முகமது அல் ஃபயீத் நன்கு அறியப்பட்டவர். எவ்வாறாயினும், அவர் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகம்

ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மம்மிகள்!

  • September 2, 2023
  • 0 Comments

எகிப்து நாட்டில் மத்திய நைல் டெல்டா பகுதியில் உள்ள அலெக்ஸாண்டிரியாவின் டபோசிரிஸ் மாக்னா கோவிலில் மோசமான நிலையில் பாதுகாத்து வைக்கப்பட்ட பதினாறு மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மம்மிகளின் மண்டை ஓட்டில் தங்க நாக்குகள் பொருத்தபட்டிருந்தது ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. எகிப்தின் தொல்பொருள் அமைச்சகம் இதனை பகிர்ந்ததன் மூலம், இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையில் பேசுவதற்கு உதவும் வழியாக இந்த தங்க நாக்குகள் பொறிக்கப்பட்டு இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க நாக்குகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தியர்களால் நடத்தப்படும் […]

அறிந்திருக்க வேண்டியவை

கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

  • September 2, 2023
  • 0 Comments

கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. அந்த நோயாளிகள் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ ​​சிரமப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 4,000 கார்கள் மீளக்கோரல்

  • September 2, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட KIA கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மின்சுற்று கோளாறு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட KIA Sorento மாடல் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட சிக்னல்கள் காட்டப்படாததால் ஏற்படும் விபத்து அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு இதே மாடலின் பல கார்கள் பிரேக் கோளாறு காரணமாக திரும்ப அழைக்கப்பட்டன.

ஆசியா

சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

  • September 2, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் செப்டம்பர் மாதம் முதல் நடப்புக்கு வரும் சில மாற்றங்கள் அல்லது நடைமுறைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் ஹோட்டல் துறைக்கு இந்தியாவில் இருந்து Work permit ஊழியர்களை கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமையல் ஊழியர்களை பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், செப்டம்பர் 1 முதல் அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை சிங்கப்பூரில் செப். 1-ம் தேதி பொது விடுமுறை நாள் என்பதால் அனைத்து ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய […]

ஐரோப்பா

வெளிநாட்டவர்களின் இடம்பெயர்வு செயல்முறையை எளிதாக்கும் ஐரோப்பிய நாடு!

  • September 2, 2023
  • 0 Comments

அதிக எண்ணிக்கையிலான உயர் தகுதி வாய்ந்த வெளிநாட்டு நிபுணர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல்கேரியாவில் உள்ள அதிகாரிகள் இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் இணைந்து செயல்படுகின்றனர். தவிர, நான்கு அமைச்சகங்கள், உள்துறை அமைச்சகம், தொழிலாளர் மற்றும் சமூகக் கொள்கை, அத்துடன் வெளியுறவு மற்றும் கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவை இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன. வடகிழக்கு பல்கேரியாவில் தொழிலாளர் சந்தைக்கான வாய்ப்புகள் என்ற நிகழ்ச்சியில் பல்கேரியாவின் பிரதம மந்திரி நிகோலாய் டென்கோவ் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்

  • September 2, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் baseball மட்டையினால் அடித்து கொலைசெய்யப்பட்டார். La Croix-de-la-Rochette (Savoie) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில், கலை 9.30 மணி அளவில்அவரை நெருங்கிய நபர் ஒருவர் குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார். மறைந்திருந்து Baseball மட்டையினால் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்குகொண்டுசெல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 1.2 மில்லியன் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய சட்டம்

  • September 2, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் நடைமுறைக்கு வந்து இருக்கின்ற குடியுரிமை புதிய சட்டத்தினால் 1.2 மில்லியன் மக்கள் பயன் பெற இருக்கின்றார்கள். ஜெர்மனியில் நடைமுறைக்கு வர இருக்கின்ற புதிய குடியேற்ற சட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கான துருக்கி நாட்டவர்கள் பயன பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது 1.2 மில்லியன் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்த வந்த நிலையில் துருக்கி நாட்டு பிரஜா உரிமையை இலக்க வில்லை. அதாவது துருக்கி நாட்டின் சட்டத்தின் படி அவர்கள் துருக்கி […]

You cannot copy content of this page

Skip to content