இலங்கை

கட்சி என்ற ரீதியில் உடன்படவில்லை, ஆனால் மக்களுக்காகவே செய்கிறோம் – சாகர!

  • September 4, 2023
  • 0 Comments

கட்சி என்ற ரீதியில் நாம் உடன்படாவிட்டாலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மக்கள் கேட்டதை பெற்றுக் கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று (04.09) நடைபெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மக்கள் சலுகைகளை கோரவில்லை. அதிக வரி விதிக்க வேண்டும் என்றும் வரி வசூலை குறைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.  எனவே அந்த […]

இலங்கை

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்! பின்னணியில் வெளியான காரணம்

பளை இயக்கச்சி இராணுவ முகாம் ஒன்றிலிருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் நான்கு மகசீன்களுடன் குருநாகல் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாதாவது, இயக்கச்சி முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் விடுமுறையில் வீட்டுக்குச் செல்லும் வேளையில் தனது T-56 ரக துப்பாக்கியையும் எடுத்துச் சென்றுள்ளார். […]

ஆசியா

5வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை… போராடி மீட்ட இளைஞர்கள்!

  • September 4, 2023
  • 0 Comments

சீனாவில் 5 மாடி ஜன்னல் கம்பியில் குழந்தை ஒன்று சிக்கி உயிருக்குப் போராடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அக் குழந்தையை இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோங்கிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பின் 5வது தளத்தின் ஜன்னல் பகுதிக்கு வந்த குழந்தை ஒன்று அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் குழந்தையின் கழுத்துப் பகுதி சிக்கிக் கொண்ட நிலையில் குழந்தை உயிருக்குப் போராடியது. இதனைக் கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த […]

இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த குடும்பஸ்தர்!

  • September 4, 2023
  • 0 Comments

திருகோணமலை -மொரவெவ, நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காத்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மொரவெவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை இன்று (04) அதிகாலை காட்டு யானை தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் அதே இடத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான டபிள்யூ. நியாஸ் ( 42) என்பவரே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் […]

ஆஸ்திரேலியா

அண்டார்டிகாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா

  • September 4, 2023
  • 0 Comments

உறைபனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் தங்கியிருந்து பணியாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகும். இந்நிலையில் அண்டார்டிகாவின் தொலைதூர பகுதியில் உள்ள கேசி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பனிக்கட்டிகளை உடைத்து முன்னேறி செல்லும் கப்பலில் மருத்துவ மீட்புக் […]

வட அமெரிக்கா

பல்பொருள் அங்காடிகளில் அதிகரிக்கும் திருட்டு! அமெரிக்க நிறுவனங்கள் கவலை

அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் டூத்பேஸ்ட், சாக்லேட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் திருடுவது அதிகரித்து வருவதாக, வால்மார்ட், டார்கெட் உள்ளிட்ட முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. சில வாடிக்கையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோல சிவிஎஸ் மற்றும் வால்கிரீன்ஸ் உள்ளிட்ட சங்கிலிதொடர் மருந்து விற்பனை நிறுவனங்கள், வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹோம் டெப்போ மற்றும் காலணி விற்பனையாளரான புட் லாக்கர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சில்லறை […]

இலங்கை

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு!

  • September 4, 2023
  • 0 Comments

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட  லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 3835 ரூபாவாகும். இதேவேளை, 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 1535 ரூபாவாகும்.

உலகம்

காபோனில் ஆட்சி கவிழ்ப்பு! இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று போர்க்கொடி தூக்கிய ராணுவம் திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்ததுடன், அதிகாரத்தை கைப்பற்றியது. அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி […]

இலங்கை

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5000 வைத்தியர்கள்!

  • September 4, 2023
  • 0 Comments

சுமார் 5,000 வைத்தியர்கள் தகுதிபெற்று வெளிநாடு செல்ல தயாராக உள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 1,500 மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில்  அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை இன்று (09.04) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. வைத்தியர்கள் தொடர்ந்தும் வெளிநாடுகளுக்குச் சென்றால் இந்நாட்டின் பிரதான வைத்தியசாலைகளில் கூட பிரச்சினைகள் எழலாம் என வைத்தியர் அளுத்கே தெரிவித்தார்.

வட அமெரிக்கா

கனடா- ஒட்டாவாவில் திருமண நிகழ்வில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி

  • September 4, 2023
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவா நகரில் திருமண நிகழ்வு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் இரண்டு டொரன்டோ பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவாவின் கன்வென்ஷன் சென்டர் என்னும் பகுதிக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 26 வயதான முகமட் அலி மற்றும் 29 வயதான சாத்தூர் ஆதி தாஹிர் […]

You cannot copy content of this page

Skip to content