மலேசியாவில் கைவிட்டுச் சென்ற அம்மா – காருக்குள் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி
மலேசியாவில் காருக்குள் விட்டுச்செல்லப்பட்ட 5 வயதுச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் துயரச் சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள Shah Alam மருத்துவமனையின் கார் நிறுத்துமிடத்தில் நடந்தது. சிறுமியின் அம்மா அந்த மருத்துவமனையில் வேலை செய்கிறார். பகல் 2 மணிக்குச் சிறுமியை அருகிலுள்ள சிறார் காப்பகத்தில் இருந்து அழைத்துவந்த அவர், மறதியால் சிறுமியைக் காரிலேயே விட்டுவிட்டு மீண்டும் வேலைக்குச் சென்றுவிட்டார். சிறுமி தூங்கிக்கொண்டிருந்ததை அவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாலை 6 மணிக்குத் […]