ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் 11 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 14 போர் விமானங்களில், 9 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்தார். குறித்த போர் விமானங்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ட்ரோன் நடவடிக்கையின் பற்றாக்குறை ஆயுத இருப்பு குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவில் வெளிநாட்டு வார்த்தைகள் பயன்படுத்த தடை! புடின் விடுத்துள்ள உத்தரவு

  • April 13, 2023
  • 0 Comments

ரஷ்ய அரசு அதிகாரிகள் வெளிநாட்டு வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது வெளிநாட்டு வார்த்தைகள் மற்றும் முகபாவனைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.திருத்தப்பட்ட சட்டத்தின்படி, அதிகாரிகள் ரஷ்ய மொழியை முறையாகப் பயன்படுத்த வேண்டும். இதற்கான உத்தரவில் அதிபர் விளாடிமிர் புடின் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டார். ரஷ்ய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள வாசகத்தின்படி, 2005 சட்டத்தின் திருத்தங்கள் ரஷ்யாவின் நிலையைப் பாதுகாப்பதற்காகவும் ஆதரிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.ரஷ்ய கூட்டமைப்பின் மாநில மொழியாக ரஷ்ய மொழியைப் பயன்படுத்தும் […]

சூட்கேசில் மனித மாமிசத்துடன் சிக்கிய இளைஞன்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்

  • April 13, 2023
  • 0 Comments

போலி ஆவணங்களுடன் பயணிப்பதாக சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்தார்கள் போர்ச்சுகல் பொலிஸார். ஆனால், விசாரணையில் அவரைக் குறித்த அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்கட்கிழமையன்று, போர்ச்சுகல்லின் லிஸ்பன் விமான நிலையத்தில், ஃபெர்னாண்டஸ் (25) என்பவரது ஆவணங்கள் சந்தேகத்துக்குரியவையாக இருந்ததால் அவரைக் கைது செய்து காவலில் அடைத்தார்கள் பொலிஸார்.அத்துடன் அவரது சட்டையில் இரத்தக்கரை இருக்கவே, அவரது சூட்கேசை சோதனையிட்டபோது, பெரிய பெரிய பார்சல்களில் ஏதோ மாமிசம் இருப்பது தெரியவந்தது. அவை மனித மாமிசமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அதிகாரிகள் […]

ஐரோப்பா செய்தி

நித்தியானந்தா தொடர்பில் ஐ.நாவில் கைலாசா பெண் பிரதிநிதி கவலை !

  • April 13, 2023
  • 0 Comments

ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியாவை சேர்ந்த சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் ‘கைலாசா பிரதிநிதிகள் கலந்துகொண்டமை உலகின்  கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் நித்தியானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதனையடுத்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டார். அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. […]

ஐரோப்பா செய்தி

கிரீஸில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து – 26 பேர் பலி 85 பேர் காயம்

  • April 13, 2023
  • 0 Comments

கிரீஸில் இரண்டு ரயில்கள் மோதிய பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 85 பேர் காயமடைந்துள்ளனர். ஏதென்ஸிலிருந்து வடக்கு நகரமான தெசலோனிகிக்கு நோக்கி 350க்கும் மேற்பட்டவர்களுடன் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மத்திய கிரீஸின், லாரிசா நகருக்கு அருகே, டெம்பி பகுதியில் தெசலோனிகியில் இருந்து லாரிசாவு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து அப்பகுதி […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் வானில் ஏற்பட்ட அபூர்வ மாற்றம் – புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்

  • April 13, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வடக்கு பிராந்தியத்தில் வானம் பல வண்ண நிறங்களில் காட்சியளித்தது. மிக அரிதான நிகழ்வான இச்சம்பவம் மிக நீண்ட நாட்களின் பின்னர் பிரான்சில் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பிரான்ஸின் பல பகுதிகளில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இதனை மக்கள் புகைப்படமாகவும், காணொளியாகவும் பதிவிட்டு வெளியிட்டனர். aurores boréales என அழைக்கப்படும் இந்த நிகழ்வு n Pas-de-Calais, Deux-Sèvres மற்றும் Burgund பெருநகரங்களில் பதிவானது. கடந்த 2015 ஆம் ஆண்டில் பின்னர் பிரான்சில் இந்த aurores boréales பதிவானது. […]

செய்தி தமிழ்நாடு

சொத்து பிரச்சனையில் தலையிட வந்த உறவினர் பலியான சோகம்

  • April 13, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் திமுகவை சேர்ந்த நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் இளங்கோ. இவருக்கும் இவரது சகோதரரான மோகன் மகள் காயத்திரி குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. 6சென்ட் நிலத்தில் தலா 3சென்ட் பிரிப்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த இடத்தில் மோகன் குடும்பத்தினர் பின் பகுதியில் வீடு கட்டியுள்ள நிலையில் முன் பகுதி காலி நிலம் இளங்கோவுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலாடு பகுதியில் உள்ள பிரச்சினைக்குரிய  மோகன் வீட்டில் […]

செய்தி தமிழ்நாடு

முதல்வர் ஆசையில் கட்சி தொடங்கியவர்கள் அனாதையாகியுள்ளனர் -ஸ்டாலின்!

  • April 13, 2023
  • 0 Comments

முதல்வர் ஆசையில் சிலர் கட்சித் தொடங்கினார்கள். அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறி கட்சித் தொடங்கிய சிலர் தற்போது அனாதையாக உள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோவையில் இன்று மாற்றுக் கட்சியினர்  திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார். தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம தான் திமுக. இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு […]

செய்தி தமிழ்நாடு

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது – புகழேந்தி விமர்சனம்!

  • April 13, 2023
  • 0 Comments

அண்ணாமலை கீழ்பாக்கத்திற்கு செல்வது நல்லது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார். ஓதமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவை போல் தன்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்மையில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி பேசும்போது, அண்ணாமலை கீழ்ப்பாக்கத்துக்கு போவது நல்லது என கூறியுள்ளார். ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா […]

செய்தி தமிழ்நாடு

மத்திய அரசின் பரிந்துரை கடிதத்தோடு தமிழக அரசை அணுகினேன்

  • April 13, 2023
  • 0 Comments

ஆராய்ச்சி அதிகாரியாக நியமிக்க மத்திய அரசு பரிந்துரைத்தும் தமிழக அரசு தொடர்ந்து அலைகழித்து வருவதாக ஆராய்ச்சியாளர் கண்ணன் ஜெகதலா கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புவியீர்ப்பு விதிகள் குறித்தும், நோபல் விருது பெற்ற ஆராய்ச்சியாளர் ஐன்ஸ்டனின் விதிகள் குறித்தும் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மத்திய அரசிடம் அங்கிகாரம் பெற்று இருப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்ற சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். இது […]

You cannot copy content of this page

Skip to content