டிரம்ப் கொலை முயற்சி தொடர்பாக ஆறு அதிகாரிகளை இடைநீக்கம் செய்த ரகசிய சேவை
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்மீது 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க ரகசியச் சேவைப் பிரிவி, ஆறு அதிகாரிகளைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அவர்கள் அதிபரின் பிரசாரக் களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த அதிகாரிகள் 10லிருந்து 42 நாள்களுக்குச் சம்பளம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாவதற்கு ஒரு நாள்முன் ரகசியச் சேவைப் பிரிவு அறிக்கை வெளியிட்டது. இடைநீக்கம் செய்யப்படும் அதிகாரிகள் சம்பவத்தை அடுத்து விசாரணை முடியும்வரை கட்டுப்படுத்தப்பட்ட […]