செம்மணி விவகாரம் : நீதிமன்றத்தில் சாட்சியமளித்த தமிழ் ஆர்வலரின் வீட்டுக்கு அருகில் மர்ம வாகனம்?
இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியை உலகிற்கு வெளிப்படுத்துவதில் முன்னின்ற இந்து மயானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரை அச்சுறுத்தும் முயற்சி வடக்கில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தனது வீட்டை நெருங்கி இராணுவ முகாமுக்குள் நுழைவதைக் கண்டதாக, சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகக் குழுவின் வைத்தியலிங்கம் கிருபாகரன் ஜூலை 8ஆம் திகதி பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். செம்மணியில் புதைகுழி வளாகத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனித […]