இலங்கை செய்தி

எரிபொருள் நெருக்கடி வரலாம்

  • October 28, 2024
  • 0 Comments

நிகழும் இஸ்ரேல் – ஈரான் மோதலால் இலங்கைக்கு எண்ணெய் பெறுவதில் நெருக்கடி ஏற்படக்கூடும் என முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கப்பல் வழித்தடங்களை மாற்றி, பணம் கொடுத்தாலும் உரிய நேரத்தில் எண்ணெய் கிடைக்காமல், கப்பல் எண்ணெய் ஆர்டர்களை ஏற்காமல், விலையை உயர்த்தும் அபாயம் ஏற்படலாம் என முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார். எனவே இந்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கு திட்டமிட வேண்டும் எனவும் அவ்வாறு செயற்பட்டால் நாட்டுக்கு தேவையான எரிபொருளை சிறிது காலத்துக்கு பிரச்சினையின்றி பெற்றுக்கொள்ள முடியும் […]

இலங்கை செய்தி

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு பணம் இல்லை

  • October 28, 2024
  • 0 Comments

அரச ஊழியர்களின் சம்பளத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்க ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால் காந்த தெரிவித்திருந்தார். நாவலப்பிட்டி பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே லால் காந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த லால் காந்த, அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு […]

இலங்கை செய்தி

நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்துங்கள் – நாமல் கோரிக்கை

  • October 28, 2024
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பை உறுதிப் படுத்துமாறு பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொதுத் தேர்தல் தேசியரபட்டியல் உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ஹட்டனில் நடைபெற்ற கட்சியின் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் புலனாய்வுக் கட்டமைப்பு பொலீஸ் அமைப்பை பயன் படுத்துவதன் மூலம் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் பலப்படுத்துவதன் மூலம் சர்வதேச நிறுவனங்கள் தூதுவராலயங்கள் போன்றவற்றின் உதவிகளை பெற்று நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதியானது என மக்களுக்கு […]

இலங்கை செய்தி

வாகன இறக்குமதிக்கான அனுமதி தற்போது பிற்போடப்பட்டுள்ளது

  • October 28, 2024
  • 0 Comments

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100 டொலர்கள் செலவிடப்பட்டதாக்கத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அதன் மூலம் நாட்டுக்கு சுமார் 250 பில்லியன் ரூபாய் வரி வருமானம் கிடைத்துள்ளதுடன், நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாக்க வாகன இறக்குமதியை நிறுத்திய போது வரி […]

இலங்கை செய்தி

தூதரகத்தை படமெடுத்தவர் கைது

  • October 28, 2024
  • 0 Comments

இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தை புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தூதரகத்தை புகைப்படம் எடுத்ததற்காக யாகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரைக் கைது செய்த பொலிஸார், விசாரணையின் போது அவரிடம் இருந்து பல ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை செய்தி

பயங்கரவாத தாக்குதல் குறித்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு

  • October 28, 2024
  • 0 Comments

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கும் பிரதேசத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அந்த விசாரணைகளின் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த […]

இலங்கை செய்தி

வெடிபொருட்களுடன் இருவர் கைது

  • October 28, 2024
  • 0 Comments

அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதவியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பதவியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 01 ஆம் மைல் பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வெடிபொருட்களை பொிஸார் மீட்டுள்ளனர். இதில் 90 ஜெலிக்னைட் குச்சிகள், 300 டெட்டனேட்டர்கள் மற்றும் 05 வெடிகுண்டுகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, ஹிடோகம மற்றும் மாபலடிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் […]

செய்தி விளையாட்டு

13000 கி.மீ சைக்கிள் ஓட்டி ரொனால்டோவை சந்தித்த சீன ரசிகர்

  • October 28, 2024
  • 0 Comments

உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கால்பந்து ஆட்டத்தில் சிறந்த வீரராக வலம் வரும் இவரை நேரில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த வகையில் சீன ரசிகர் ஒருவர் ரொனால்டோவை நேரில் பார்ப்பதற்காக 13 ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிளில் வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ரொனால்டோ, கடந்த பிப்ரவரி மாதம் சீனா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த பயணம் எதிர்பாராதவிதமாக […]

இலங்கை செய்தி

சுமந்திரனுக்கு பகிரங்க சவால் விட்டுள்ள கீதநாத்

  • October 28, 2024
  • 0 Comments

பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளவில்லை என்பதை சத்தியக்கடதாசி மூலம் வெளிப்படுத்த வேண்டும் என ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த பகிரங்க கோரிக்கையை விடுத்தார். மேலும் தெரிவிக்கையில், நான் மதுபானசாலையை எடுக்கவில்லை என்பதை கடந்த வாரம் ஊடக சந்திப்பில் சத்தியக் கடதாசியை காண்பித்து வெளிப்படுத்தியிருந்தேன். இதனை […]