மத்திய கிழக்கு

சிரியாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள், பயங்கர மோதல்களைத் தொடர்ந்து அமலுக்கு வந்த புதிய போர்நிறுத்தம்

  • July 17, 2025
  • 0 Comments

சிரியாவின் தெற்கு மாகாணமான ஸ்வீடாவில் புதன்கிழமை இரவு ஒரு பலவீனமான போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது, அரசாங்கப் படைகள், ட்ரூஸ் போராளிகள் மற்றும் பெடோயின் பழங்குடியினருக்கு இடையே பல நாட்கள் நடந்த கொடிய மோதல்களைத் தொடர்ந்து சிரிய இடைக்கால அரசாங்கப் படைகள் நகரத்திலிருந்து பின்வாங்கத் தொடங்கியதாக அரசு நடத்தும் ஊடகங்கள் தெரிவித்தன. ஸ்வீடாவில் உள்ள ட்ரூஸ் சமூகத்தின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் பல வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு […]

பொழுதுபோக்கு

நடிகை ராஷ்மிகா தங்கையுடன் எடுத்த அழகிய போட்டோஸ்

  • July 17, 2025
  • 0 Comments

தென்னிந்தியாவை தாண்டி ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஒரு தங்கை இருக்கிறார். அவருடைய பெயர் ஸீமன் மந்தனா. ராஷ்மிகாவுக்கும், அவருடைய தங்கைக்கு இடையே 16 வயது வித்தியாசம் உள்ளது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது தங்கை ஸீமன் மந்தனாவுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்கள் இதோ,  

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

சிரியாவில் இஸ்ரேல் அட்டகாசம் – அமைதியை நிலைநாட்டும் தீவிர முயற்சியில் அமெரிக்கா

  • July 17, 2025
  • 0 Comments

சிரியாவில் வன்முறைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு அமைதியை நிலைநாட்டும் வகையில் ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்மையில், தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, தென் பகுதியிலிருந்து ராணுவத்தை பின்வாங்கத் தொடங்கியுள்ளதாக சிரியாவின் தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும், சண்டைநிறுத்த ஒப்பந்தத்திற்கு கடைப்பிடிக்கும் அனைத்து தரப்புகளும் தங்கள் பங்கை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அமெரிக்க […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 7 மாத ஆண் குழந்தையை கத்தியால் குத்திக் கொன்ற தாய்

  • July 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – பெர்த்தில் தனது ஏழு மாத ஆண் குழந்தையை கத்தியால் குத்திக் கொன்றதாக தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பால்கட்டாவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த இந்தக் கொலை, வீட்டு வன்முறையின் விளைவாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. 31 வயது தாய் சர் சார்லஸ் கெய்ர்ட்னர் மருத்துவமனைக்கும், 13 வயது சிறுமி பெர்த் குழந்தைகள் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். மேற்கு ஆஸ்திரேலியா காவல்துறை ஆணையர் […]

வாழ்வியல்

குடல் ஆரோக்கியம் தொடர்பில் எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

  • July 17, 2025
  • 0 Comments

உணவைச் செரிப்பது மட்டுமல்லாமல், நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களையும், நுண் சத்துக்களையும் உறிஞ்சுவதில் நமது செரிமான மண்டலம் (gut) முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் குடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அது பெரும்பாலும் subtle-ஆக சில நுட்பமான அறிகுறிகள் மூலம் வெளிப்படும். இவற்றை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. குடல் சம்பந்தமான பிரச்சனைகளைக் கண்டறிய உதவும் ஐந்து அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்தாவது அறிகுறி மிகவும் பொதுவானது என்று இரைப்பை குடல் நிபுணரும், இன்டர்வென்ஷனல் எண்டோஸ்கோபிஸ்ட்டுமான […]

செய்தி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு மற்றுமொரு நெருக்கடி

  • July 17, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை, மற்றொரு கூட்டணி கட்சியும் விலக்கி கொண்டதால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, பாராளுமன்றத்தில் நெதன்யாகு அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல், ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வருகிறது. ஈரான் உடனான போர் நிறுத்தப்பட்டாலும் பதற்றம் நீடிக்கிறது. இதுபோல், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் நீடிக்கிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு […]

உலகம்

கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அழிக்க உதவும் எலிகள்

  • July 17, 2025
  • 0 Comments

கம்போடியாவில் மோப்ப நாய்களை போல் ஆப்ரிக்க பெரிய எலிகளை பயன்படுத்தி, நிலத்தில் மறைந்துள்ள கண்ணிவெடிகளை கண்டு பிடித்து அழிக்கும் பணியில், அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கடந்த 1990ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நிலவியது. அப்போது நாடு முழுதும் உள்ள 25 மாகாணங்களில் ஏராளமான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. இதை தவறுதலாக மிதித்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இவற்றை கண்டறிந்து அழிக்கும் பணி கடந்த 1992ல் துவங்கியது. இதுவரை 11 லட்சம் கண்ணிவெடிகள் மற்றும் […]

விளையாட்டு

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

  • July 17, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்த திடீர் முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர்கள் இருவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் ஓய்வு அறிவித்தது, பிசிசிஐ (BCCI – இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) அவர்களை கட்டாயப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியானது

  • July 17, 2025
  • 0 Comments

வெளிநாட்டு மாணவர்களுக்கான உலகின் சிறந்த நகரங்களின் பட்டியல் QS அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசை மொத்தம் ஆறு முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளது: பல்கலைக்கழகங்களின் தரவரிசை, நகரம் குறித்த மாணவர்களின் மதிப்பீடு, அந்நகரத்தில் உள்ள வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை,பட்டம் பெற்ற மாணவர்களை முதலாளிகள் மதிப்பீட்டும், மாணவர்களை ஈர்க்கும் நகரத்தின் திறன், வாழ்விக் கட்டுப்பாடுகள் மற்றும் செலவு, இந்த அடிப்படைகளில் நகரங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் 10 இடங்களில் இடம்பெற்ற நகரங்கள்: சோல், தோக்கியோ, லண்டன், மியூனிக், […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை உலுக்கிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

  • July 17, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் விளைவாக, அலாஸ்காவின் கடலோரப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலாஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் தீவில் இருந்து 87 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Skip to content