வட அமெரிக்கா

அமெரிக்காவில் ஆராய்ச்சி மையத்திலிருந்து தப்பிய குரங்கள் – பிடிக்கும் பணியில் 2,000 ஊழியர்கள்

  • November 8, 2024
  • 0 Comments

அமெரிக்காவில் ஆராய்ச்சி மையத்திலிருந்து, 43 குரங்குகள் தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனைப் பிடிக்க ஆராய்ச்சி மையத்தின் 2,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் யமாசி என்ற நகரில் உள்ள அல்பா ஜெனிசிஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே இந்த குரங்குகள் தப்பிச் சென்றுள்ளது. தப்பிய குரங்குகள் இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை என்பதால், குரங்கால் எந்த நோயும் பரவ வாய்ப்பில்லை என்று ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் வீடுகளுக்குள் குரங்குகள் நுழையாமல் இருக்கும் வகையில் வாயில் கதவுகளைப் பூட்டி வகைக்குமாறு […]

கருத்து & பகுப்பாய்வு

சவூதியில் 4000 ஆண்டுகள் பழமையான கோட்டை கண்டுப்பிடிப்பு!

  • November 8, 2024
  • 0 Comments

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவில் 4,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான கோட்டைக் குடியேற்றத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது நாடோடி வாழ்க்கை முறையிலிருந்து நகர்ப்புற இருப்புக்கான மாற்றத்தை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நகரத்தின் எச்சங்கள், மதீனா மாகாணத்தில் உள்ள சோலையான கைபரில் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு அல்-நதாஹ் என பெயரிடப்பட்டுள்ளது. பிரெஞ்சு-சவுதி ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த நகரத்தை கண்டுபிடித்தது, இது கிமு 2,400 க்கு முந்தையது மற்றும் சுமார் 500 குடியிருப்பாளர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. சுமார் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ChatGPT குரல்வழி வசதி நிதி மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம்

  • November 8, 2024
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியின் (CHAT GPT) குரல்வழி வசதி, நிதி மோசடிக்கு பயன்படுத்தப்படலாம் என அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தெரிந்த நபரைப் போன்றே குரல் மாற்றம் செய்து பேசி, தகவல்களை திருட இந்த செயலியை மோசடியாளர்கள் பயன்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வங்கி மோசடிகளுடன், சமூக வலைதள பாஸ்வேர்டுகளும் திருடப்படலாம் என கூறப்படுகிறது. சுமார் 60 ரூபாய் முதல் 240 ரூபாய் செலவிற்குள் இந்த மோசடிகளை நிகழ்த்திவிட முடியும் என ஆய்வுகள் […]

செய்தி

அமெரிக்காவில் வீதிகளை மூடிய பனி – போக்குவரத்து நிறுத்தம் – 30000 மக்கள் பாதிப்பு

  • November 8, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மற்றும் கொலராடோ மாகாணங்களில் பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 8,064 அடி உயரத்தில் உள்ள குளோரிட்டா மீசா என்ற பகுதியில் பனி மழை கொட்டும் நிலையில், சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி படர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவால் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் செல்ல முடியாமல் ஆங்காங்கே பனியில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் இரத்து!

  • November 8, 2024
  • 0 Comments

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கூற்றுப்படி, இந்த வருடத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம்  நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வணக்கம் செலுத்தியமைக்காக சிறை செல்லும் நபர்!

  • November 8, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வணக்கம் செலுத்தியமைக்காக  நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் பதிவாகியுள்ளது. ஜேக்கப் ஹெர்சன்ட் என்ற 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நாஜி சல்யூட் செய்ததற்காக மேற்படி தண்டனையை பெற்றுள்ளார். மெல்போர்னின்  மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நாஜி சைகை நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த  அக்டோபர் 27, 2023 அன்று விக்டோரியா கவுண்டி நீதிமன்றத்திற்கு வெளியே செய்திக் கேமராக்கள் முன் தடை செய்யப்பட்ட சைகையை காட்டி வணக்கம் […]

செய்தி விளையாட்டு

ஏலத்தில் எடுக்க வேண்டிய 5 பேர்… பெங்களூரு அணிக்கு ஏபி டி வில்லியர்ஸ் ஆலோசனை

  • November 8, 2024
  • 0 Comments

  அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணிக்கு ஏலத்தில் சென்று விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் இப்போதே எழுந்துவிட்டது. இதற்கான மெகா ஏலமானது வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு முன்னதாக, ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்த விவரத்தைத் தீபாவளி பண்டிகையையொட்டி தெரிவித்திருந்தார்கள். அதில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ஆகியோரை தக்க வைக்கவுள்ளதாக […]

ஆப்பிரிக்கா

10 ஆவது முறையாக இருளில் மூழ்கிய நைஜீரியா!

  • November 8, 2024
  • 0 Comments

நைஜீரியாவின் முக்கிய நகரங்களான அபுஜா, லாகோஸ் மற்றும் கானோ ஆகியவை நேற்று (11.08) மின்தடையை சந்தித்துள்ளன. கணினி செயலிழப்பு காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக நைஜீரியாவின் டிரான்ஸ்மிஷன் நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நைஜீரியாவில் மின் உற்பத்தித் துறை முதலீட்டு பற்றாக்குறையால் இவ்வாறான நிலை ஏற்படுவது பொதுவானது. இவ்வருடத்தில் மாத்திரம் 10 முறை மின் துண்டிப்பை எதிர்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு 13,000 மெகாவாட்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது, ஆனால் பலவீனமான உள்கட்டமைப்பு காரணமாக […]

ஐரோப்பா

உட்கட்சி பூசல்களால் பிளவுப்பட்ட கூட்டணி : அந்தரத்தில் தொங்கும் ஜேர்மனியின் பொருளாதாரம்!

  • November 8, 2024
  • 0 Comments

ஜேர்மனியின் ஆளும் கூட்டணியின் சரிவு மற்றும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு உடனடித் திரும்புதல் ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய பொருளாதாரத்திற்கு புதிய அபாயங்களை உருவாக்குகின்றன. கொரோனா வைரஸ் தொற்று, உக்ரைன் போர் மற்றும் சீனாவின் போட்டி ஆகியவற்றால் ஜெர்மனியின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுருங்கி வருகிறது. உள்நாட்டில் உள்ள கட்டமைப்புச் சிக்கல்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் பிளவுபட்ட அரசியல்  கூட்டணி சில முக்கிய பிரச்சினைகளில் முன்னோக்கிச் […]

ஐரோப்பா

மோதலை முடிவுக்குக் கொண்டு வர தயார் – புட்டின் எடுத்த தீர்மானம்

  • November 8, 2024
  • 0 Comments

உக்ரைன் விவகாரத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவித்துள்ளார். அதற்கான பேச்சுவார்ததை நடத்தவும் தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சோச்சி நகரில் வால்டாய் கிளப் நடத்திய உரையாடலில் புட்டின் கலந்து கொண்டு பேசுகையில், இதனை கூறியுள்ளார். உக்ரைன் நடுநிலை வகிக்காவிட்டால், அதனை பிற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்துவர் எனவும் உக்ரைனை ஒட்டிய ரஷ்யாவின் எல்லையை அப்பகுதி மக்கள்தான் முடிவு செய்வார்கள் எனவும் கூறினார். ஐரோப்பிய நாடுகள் சுமூகமான […]