ஆஸ்திரேலியா

சிட்னியில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாகத் தரையிறங்கிய குவாண்டாஸ் விமானம்

  • November 8, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து பிரிஸ்பன் நகருக்குக் கிளம்பிய குவாண்டாஸ் நிறுவன விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) அவசரமாகத் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமானத்தின் இயந்திரத்திலிருந்து பலத்த ஓசை கேட்டதையடுத்து அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிகிறது. கிளம்பிய விமானம் உடனே திரும்பி, பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக சிட்னி விமான நிலையப் பேச்சாளர் தெரிவித்தார். சிட்னி விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் புறப்பட்டதை அடுத்து விமான ஓடுபாதைக்கு அருகே அமைந்துள்ள புல்வெளியில் தீப்பிடித்தது கண்டறியப்பட்டதாக ஊடகங்கள் கூறின. விமான […]

இலங்கை

இலங்கை – ராகமவில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது!

  • November 8, 2024
  • 0 Comments

இலங்கை – ராகமவில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பெண் அதிபர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளையை அடுத்த வருடம் தரம் 1 வகுப்பில் சேர்ப்பதற்காக அதிபர் பணத்தைக் கோரியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஆஸ்திரேலியா

சிட்னி கடற்கரைகளில் காணப்பட்ட மர்மப் பந்துகள் – சோதனையில் வெளிவந்த தகவல்

  • November 8, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கடற்கரைகளில் அண்மையில் மர்மப பந்துகள் சில கண்டுபிடிக்கப்பட்டடது. மர்மப் பந்துகளில் மலம், முடி, உணவுக் கழிவுகள் போன்ற அருவருப்பூட்டும் பல பொருள்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. சென்ற மாதம் 2024) ஆயிரக்கணக்கான, அசுத்தமான கருமைநிறப் பந்துகள் சில கடற்கரைகளில் கரையொதுங்கின. அந்த மர்மப் பந்துகளைத் தொடுவதைத் தவிர்க்குமாறு நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) சுற்றுப்புறப் பாதுகாப்பு ஆணையம் சிட்னி குடியிருப்பாளர்களிடம் கேட்டுக்கொண்டது. அவற்றை அப்புறப்படுத்துவதற்காக 7 கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. அந்த […]

இன்றைய முக்கிய செய்திகள் கருத்து & பகுப்பாய்வு

வேகமாக உருகிவரும் டூம்ஸ்டே பனிப்பாறை : விஞ்ஞானிகள் முன்வைக்கும் புதிய திட்டம்!

  • November 8, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் ஒரு பெரிய அண்டார்டிக் பனிப்பாறை உருகுவதைத் தடுக்க விஞ்ஞானிகள் தீவிரமான திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ என்றும் அழைக்கப்படும் த்வைட்ஸ் பனிப்பாறையை அடைவதிலிருந்து வெதுவெதுப்பான நீரைத் தணிக்க, நீருக்கடியில் ஒரு மாபெரும் திரைச்சீலை நிறுவுதல், கடல்நீரைக் கொண்டு பனிப்பாறைகளை செயற்கையாக பெரிதாக்குவதை ஆய்வாளர்கள் முன்மொழிந்துள்ளனர். த்வைட்ஸ் பனிப்பாறை காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் விகிதத்தில் உருகுவதுடன்,   உலகளாவிய ரீதியில் கடல் மட்டத்தை 10 அடி உயர்த்துகிறது. இதைத் தவிர்க்க, […]

உலகம் செய்தி

ஸ்பெயினில் வாழைப்பழங்களுக்குள் சிக்கிய மர்மம் – அதிகாரிகள் அதிர்ச்சி

  • November 8, 2024
  • 0 Comments

ஸ்பெயினில் வரலாறு காணாத அளவில் 13 டன் கொக்கேய்ன் (Cocaine) போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் எக்வடோரின் (Ecuador) குவாயாகில் (Guayaquil) நகரிலிருந்து வந்த கப்பலிலிருந்து கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டது. கப்பலில் வாழைப்பழங்கள் கொண்டுவரப்பட்டன. அவை கொகேய்ன் உள்ள பெட்டிகளை மறைக்கப் பயன்படுத்தப்பட்டன. அவற்றைப் பற்றி எக்வடோர் அதிகாரிகள் ஸ்பானிய அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர். சம்பவத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் அவர் என்று நம்பப்படுகிறது. மற்ற 2 சந்தேக நபர்களைக் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

UKவின் வெப்பநிலை தொடர்பில் வெளியான தகவல் : லண்டன் வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

  • November 8, 2024
  • 0 Comments

இந்த மாதத்தின் பிற்பகுதியில் UK இன் சில பகுதிகளில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவை எதிர்கொள்வதைக் காட்டும் வரைபடத்தின்படி வேல்ஸ், வடக்கு அயர்லாந்து, மேற்கு ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் பல பகுதிகள் வெளிர் நீல நிற நிழல்களால் மூடப்பட்டிருந்தது. இது வெப்பநிலை 0C க்கும் கீழே குறையும் என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வெப்பநிலை OC க்கு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடக்கு இங்கிலாந்தில் பாதரசம் சுமார் -1C ஆகவும், […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க அதிகார மாற்றம் தொடர்பில் ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பு

  • November 8, 2024
  • 0 Comments

அடுத்த வருடம் ஜனவரி மாதம் 20ஆம் திகதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயகம் மேலோங்கியுள்ளது என்பதை தற்போதைய தேர்தல் பெறுபேறு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேர்மையானதும், நீதியானதுமான தேர்தல் இடம்பெற்றுள்ளது. இந்தநிலைமை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிடம் கோரியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவருடன் […]

பொழுதுபோக்கு

பாகுபலி படத்தின் இன்ஸ்பிரேஷன் சூர்யாதான்… அரங்கை அதிரவிட்ட ராஜமவுலி

  • November 8, 2024
  • 0 Comments

கங்குவா படத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறது. தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ப்ரமோஷன் தற்போது நடந்து வருகிறது. நவம்பர் 14 அன்று ரிலீஸ் ஆக இருக்கும் இப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் முதல் தமிழ் படம் என இப்போது கணிப்புகள் சொல்கின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவுடன் பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்தின் தெலுங்கு பிரமோஷன் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பான் இந்தியா இயக்குனர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து […]

செய்தி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

  • November 8, 2024
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.17 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.63 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.70 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது

இலங்கை

இலங்கையில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை கடத்த முயற்சித்த நபரால் பரபரப்பு!

  • November 8, 2024
  • 0 Comments

இலங்கையில் பலாத்காரமாக வீட்டினுள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டில் வசிந்து வந்தவர்களை பயமுறுத்தி அங்குள்ள யுவதி ஒருவரை கடத்த முயன்ற சம்பவம் ஒன்று வலஸ்முல்லவில் இருந்து பதிவாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (07) இரவு குறித்த சந்தேகநபர் நுழைந்து அங்குள்ளவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி யுவதி ஒருவரை கடத்த முற்பட்டுள்ளதாக 119 அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]