Site icon Tamil News

“Ordinary Person” பாடலும் காப்பியா?.. POtnicka என்ன சொன்னாரு தெரியுமா? அனிருத்துக்கு ஆப்பு ரெடி…

லியோ திரைப் படத்தில் இடம்பெற்ற Am just a ordinary person பாடலை Peaky Blinderல் இருந்து அனிருத் காப்பி அடித்து விட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

5 நாட்களில் லியோ திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், படக்குழு முதல் நாள் வசூலை தவிர மற்ற எதையும் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், அனிருத் இசையில் உருவான Am just a ordinary person பாடலுக்கு சொந்தக்காரர் இசையமைப்பாளர் Otnicka தான் என அவருக்கே ரசிகர்கள் டேக் செய்ய அவர் அளித்துள்ள பதில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்திய சினிமாவில் காப்பி சர்ச்சை அடிக்கடி எழுந்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் அனிருத் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே சமீப காலமாக மிகப்பெரிய ஹிட் அடித்து வரும் நிலையில், ஏகப்பட்ட காப்பி சர்ச்சையும் வெடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/WhySanaaWhy/status/1716724557522874465

லியோ படத்துக்கும் அதே போன்ற ஒரு சர்ச்சையில் வசமாக சிக்கியிருக்கிறார் அனிருத்.

லியோவில் இடம் பெற்ற ஆர்டினரி பர்சன் பாடல் நேற்று யூடியூபில் வெளியான நிலையில், ரசிகர்கள் பலரும் Peaky Blinder படத்துக்கு இசையமைத்த Otnickaவிடம் ரசிகர்கள் அந்த பாடலை டேக் செய்து, எங்கே போயிட்டீங்க.. இந்த பாடல் உங்களுடைய ‘I’m not outsider’ பாடலின் காப்பி என குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த Otnicka, “என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கூடிய விரைவில் விசாரணை நடத்தி என்ன ஆனது என்கிற பதிலை சொல்கிறேன். இதுவரை என்னிடம் யாரிடமும் இந்த பாடலுக்காக காப்பி ரைட்ஸை பெறவில்லை” என்றும் அவர் அதிரடியாக தெரிவித்து அனிருத்துக்கு ஆப்படித்துள்ளார்.

 

Exit mobile version