பொழுதுபோக்கு

நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் அதிதி ஷங்கர்..

நடிகை அதிதி ஷங்கர், நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர இருக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

‘விருமன்’ படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக அறிமுகமானார் நடிகை அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே தனது துள்ளலான நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார். நடிப்பு, நடனம் மட்டுமல்லாது பாடகியாகவும் தம்ப்ஸ் அப் வாங்கினார் அதிதி. அடுத்து, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்த அதிதி, தற்போது, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சூர்யாவுக்கு ஜோடியாகப் போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதிதி ஷங்கர், சூர்யா....

‘விருமன்’ வந்த சமயத்திலேயே அடுத்து சூர்யாவுக்கு ஜோடியா என அதிதியிடம் கேட்கப்பட்டது. இப்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ‘கங்குவா’ படத்திற்கு அடுத்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பது முன்பே அறிவிக்கப்பட்டத் தகவல் தான். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘கங்குவா’, ‘வாடிவாசல்’ படத்திற்கு அடுத்து சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content