இந்தியா

நடிகை குஷ்பு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு.

அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தம்பி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம்டைந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் குஷ்பு.

இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பா.ஜ.க. நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார்.

இந்நிலையில், நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு குஷ்பு அடினோவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content