Site icon Tamil News

AI தொழில்நுட்ப உதவியுடன் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

அமெரிக்காவின் தீயணைப்புத் துறைக்கும் தொழில்நுட்பம் AI கைகொடுத்துள்ளது.

கலிபோர்னியாவில் நள்ளிரவில் பற்றிய காட்டுத் தீயை அணைக்க AI உதவியிருக்கிறது.

ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிவதற்குக் கலிபோர்னிய அதிகாரிகள் பயன்படுத்தும் கண்காணிப்பு முறையில் AI தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி, கிலிவ்லந்து (Cleveland) தேசிய வனப்பகுதியின் நேரடி நிலவரத்தைக் கண்காணிக்கும் கணினிகள் புகைமூட்ட அறிகுறியைக் கண்டுபிடித்தன. அத்தகவலைச் சரிபார்த்த அதிகாரிகள் அதனை உறுதிசெய்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

AI தொழில்நுட்பம் தக்க நேரத்தில் எச்சரிக்காமல் இருந்திருந்தால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும்.

சுமார் கால் ஹெக்டருக்கும் குறைவான பகுதி தீக்கிரையாவது தடுக்கப்பட்டதாகத் தீயணைப்புத் துறை கூறியது.

AI தொழில்நுட்பம் கூடுதல் உதவிக்கரமாக இருந்தாலும் தீயணைப்பு வீரர்களுக்கு அது மாற்றாக முடியாது என்று கலிபோர்னிய அதிகாரிகள் கருதுகின்றனர்.

Exit mobile version