Tamil News

விஜய் இல்லாமல் நடந்து முடிந்த சஞ்சய் படத்தின் பூஜை..

நடிகர் விஜய் அடுத்தடுத்த வெற்றிப்பட இயக்குநர்களுடன் கூட்டணி அமைத்து படங்களை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து விஜய் கொடுத்திருந்த லியோ படம் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்திற்காக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார்.

விஜய்யின் மகன் சஞ்சய்யும் தற்போது சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் தன்னுடைய தந்தையின் வேட்டைக்காரன் படத்தில் நா அடிச்சா தாங்க மாட்ட பாடலில் முன்னதாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

தொடர்ந்து இவர் நடிப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய படிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் சஞ்சய்யை நாயகனாக அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார்.

ஆனால் தான் நடிகராக இல்லாமல் இயக்குநராக மாற விரும்புவதாக சஞ்சய் உறுதியாக கூறிவிட்டார். இந்நிலையில் சில குறும்படங்களையும் இயக்கியுள்ள சஞ்சய், தற்போது லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.

இதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொள்ளைக் கொண்டது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜையை சைலண்டாக லைகா நிறுவனம் போட்டுள்ளது. போயஸ் கார்டனில் போடப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில இந்தப்படத்தின் பூஜை நடந்துள்ளது.

இந்தப் பூஜையில் விஜய் பங்கேற்காத நிலையில் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதனிடையே படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Exit mobile version