லண்டனில் பிரபல பாடசாலைக்கு அருகில் அமில வீச்சு தாக்குதல் : மூவர் படுகாயம்!
மேற்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே 14 வயது சிறுமி, அமிலத்தன்மை கொண்டதாக கருதப்படும் ஒரு பொருளால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்போர்ன் பூங்காவின் ஆல்ஃபிரட் சாலையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, வெஸ்ட்மின்ஸ்டர் அகாடமியின் ஊழியர் ஒருவர் பெருநகர காவல்துறை அதிகாரிகளை வரைவழைத்துள்ளார்.
இந்த அமில வீச்சு தாக்குதலில் 14 வயதுடைய சிறுமி 16 வயதுடைய சிறுவன் மற்றும் 27 வயதுடைய பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் அகாடமி மூடப்பட்டது, பாடங்கள் ஆன்லைனில் நடைபெறுவதாகவும், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிப்புரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.