தைவானை நோக்கி நகரும் சக்திவாய்ந்த புயல் : 40 ஆயிரம் துருப்புக்களை களமிறக்கியுள்ள அரசு!
பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி தைவானையும் தாக்கக்கூடும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ள நிலையில் தைவானில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டஜன் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டடுள்ளதாகவும், பாதுகாப்பற்ற இடங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வெறியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு உதவ கிட்டத்தட்ட 40,000 துருப்புக்கள் திரட்டப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிராத்தான் என பெயரிடப்பட்டுள்ள குறித்த புயலானது முதலாவதாக தென்மேற்கில் உள்ள முக்கிய துறைமுக நகரமான காஹ்சியங்கைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்னர் தைவானின் மையம் மற்றும் வடகிழக்கு கிழக்கு சீனக் கடலை நோக்கி நகரும் என்று மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.