Site icon Tamil News

13 அடி நீளமுள்ள இராட்சத முதலையின் வாயில் இருந்த மனித உடல்

புளோரிடா அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலமாகும். இதன் தலைநகரம் தல்லாஹஸ்ஸி. பினாலஸ் கவுண்டி மாநிலத்தின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

அங்குள்ள நீர்நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள் விரைந்து அப்பகுதிக்குச் சென்றனர்.

சம்பவ இடத்தின் ரிட்ஜ்கிரெஸ்ட் பகுதியில் 121 வது தெரு மற்றும் 134 வது வடக்குக்கு அருகில் உள்ள நீர்நிலையில் 13 அடி நீளமுள்ள முதலை காணப்பட்டது. மனித உடலின் ஒரு பகுதி அதன் வாயில் இருந்துள்ளது.

இதையடுத்து முதலை சுடப்பட்டது. அதன் வாயிலிருந்து மனித உடல் உறுப்புகளை அதிகாரிகள் பாதுகாப்பாக அகற்றி பரிசோதனை செய்தனர்.

விசாரணையில் உயிரிழந்தவர் 41 வயதான சப்ரினா பெக்காம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சில மணி நேரம் நடந்த இந்த செயலை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளூர்வாசி டெர்ரி வில்லியம்ஸ் கூறுகையில், “இவ்வளவு நீளமான பெரிய முதலை இங்குள்ள ஏரியில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version