Site icon Tamil News

மூன்றாவது முறையாக 6000 ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மெட்டா நிறுவனம்

மூன்றாவது முறையாக 6000 ஊழியர்களை பண நீக்கம் செய்வதற்கு மெட்டா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டது. அதனால், பிரபல தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், மெட்டா நிறுவனமும் தீவிரம் காட்டி வருகிறது. அதில், முதல் கட்டமாக கடந்த நவம்பர் மாதம் சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் நான்கு ஆயிரம் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. இந்த நிலையிலும் தற்போது மூன்றாவது கட்டமாக ஆறு ஆயிரம் ஊழியர்களை அடுத்த வாரத்தில் பணி நீக்கம் செய்ய உள்ளது.

அவ்வாறு பணி நீக்கம் செய்யும் ஊழியர்கள் அனைவரும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் போலி செய்திகளை கண்காணிக்கும் பிரிவில் பணிபுரிவோர் ஆவர். மேத்தாவின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, சமூக ஊடகங்களில் போலி செய்திகளின் போக்கு அதிகரித்து வருவதற்கிடையே, அவற்றை முறையாக சரி பார்த்து நீக்குவது மற்றும் தணிக்கை செய்யும் பணிகளை துரிதப்படுத்தாது, அப்பிரிவில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

Exit mobile version