இலங்கை

திருகோணமலையில் புத்தாடை தகைக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!

  • December 31, 2023
  • 0 Comments

திருகோமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (30) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவதினத்தன்று குறித்த 17 வயதுடைய […]

ஆசியா

பாக்.வேட்புமனு தாக்கலிலும் விளையாடும் அரசியல்… பின்னடைவில் இம்ரான்கான்-முன்னிலையில் நவாஸ் ஷெரீப்

  • December 31, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த இரு மனுக்களையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் அரசியல் களத்தில் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் புதிய பின்னடைவை சந்தித்துள்ளார். அடுத்தாண்டு அங்கு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறையில் இருந்தபடி அவர் தாக்கல் செய்த இரு மனுக்களையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. 71 வயதாகும் இம்ரான்கான் 2022 ஏப்ரலில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது […]

இலங்கை

இலங்கையில் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் பேருந்து கட்டணங்கள்!

  • December 31, 2023
  • 0 Comments

ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் VAT திருத்தத்தின் காரணமாக பஸ் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் ஏனைய உள்ளீடுகளை கருத்தில் கொண்டு கட்டணங்களை திருத்துமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பஸ் கட்டணத்தை திருத்தியமைக்காவிட்டால், நாடு முழுவதும் தொடர் பஸ் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

பொழுதுபோக்கு

“தளபதி 68 ” வேற லெவல்ல இருக்கும்.. அப்டேட் சொன்னது யார் தெரியுமா?

  • December 31, 2023
  • 0 Comments

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் சூட்டிங் மீண்டும் துவங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. மேலும் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட வெங்கட்பிரபுவின் கேங்கும் படத்தில் இணைந்துள்ளது. அதிகமான நட்சத்திரங்களின் கூட்டணியில் தளபதி 68 […]

உலகம்

அல்பேனியாவின் முன்னாள் பிரதமர் வீட்டுக்காவலில்

அல்பேனியா – எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு தலைமை தாங்கும் முன்னாள் பிரதமர் சாலி பெரிஷாவை வீட்டுக் காவலில் வைக்க அல்பேனிய நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. பெரிஷா அவருடன் வசிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜென்க் ஜிஜோகுதாஜ் கூறியுள்ளார். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஜிஜோகுதாஜ் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் புதிதாக கையடக்க தொலைப்பேசிகளை கொள்வனவு செய்யவுள்ளவர்களுக்கான செய்தி : புதிய விலை அறிவிப்பு!

  • December 31, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு புதிய பெறுமதி சேர் வரி சீர்த்திருத்திற்கு அமைய நாளை (01.01.2024) முதல் புதிய வரி கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அனைத்து வகையான கையடக்க தொலைப்பேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என  கையடக்க தொலைபேசி விற்பனை மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் “நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை கிட்டத்தட்ட 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். நாளை முதல் அமுலுக்கு […]

உலகம்

பிரித்தானிய இராணுவக் கப்பல் வெளியேறும் வரை துருப்புக்கள் நிலைநிறுத்தப்படும் வெனிசுலா எச்சரிக்கை

அண்டை நாடான கயானாவுக்கு அனுப்பப்பட்ட பிரித்தானிய இராணுவக் கப்பல் இரண்டு தென் அமெரிக்க நாடுகளின் கடற்கரையிலிருந்து வெளியேறும் வரை கிட்டத்தட்ட 6,000 துருப்புக்களை நிலைநிறுத்துவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. . படைகள் “எங்கள் தேசிய இறையாண்மையைப் பாதுகாக்கின்றன” என்று வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பத்ரினோ கூறியுள்ளார். நாட்டின் கிழக்குப் பகுதியில் மட்டுமல்ல, முழுப் பகுதியிலும் ஆயுதப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார். “இந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய படகு வெனிசுலாவிற்கும் கயானாவிற்கும் இடையே உள்ள சர்ச்சைக்குரிய கடற்பரப்பில் […]

இலங்கை

இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

  • December 31, 2023
  • 0 Comments

நீதி நடவடிக்கையின் கீழ் 14 நாட்களில் கைது செய்யப்பட்ட மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 20,797 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.6 கிலோ ஹெராயின், 8.3 கிலோ ஐஸ் மற்றும் 72,272 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. பொது பாதுகாப்பு அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.

ஐரோப்பா

பிரபல பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்!

  • December 31, 2023
  • 0 Comments

பிரபல பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் தனது 75ஆவது வயதில் காலமானார். வில்கின்சன் வீட்டில் திடீரென மரணமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1997 இன் தி ஃபூல் மான்டியில் நடித்ததற்காக பாஃப்டா விருதை வென்ற வில் கின்சன், இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். 130 படங்களுக்கு மேல் இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதோடு, டெலி நாடகங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு

13 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

  • December 31, 2023
  • 0 Comments

தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ள நடிகை த்ரிஷா, பாலிவுட்டில் ரீ என்ட்ரியாக உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மாறி மாறி நடித்த த்ரிஷாவுக்கு தெலுங்கில் தனி மார்க்கெட் உண்டு. மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கெல்லாம் ஜோடி போட்டு நடித்துள்ள இவர், சிம்பு, தனுஷ், விக்ரம் சூர்யா, விஷால், ஜெயம் ரவி, ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் […]