ஐரோப்பா

பிரான்சில் இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

  • June 28, 2023
  • 0 Comments

பிரான்சில் போக்குவரத்து விதிகளை மீறி காரை செலுத்திய 17 வயதான இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தலைநகரில் உள்ள காவல்நிலையத்தை  மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.   தடுப்புகளுக்கும் குப்பைத் தொட்டிகளுக்கும் தீ மூட்டியதோடு பேருந்து நிறுத்துமிடம் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில். காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது  கண்ணீர்ப் புகை பிரயோகம் மேற்கொண்டதுடன், 9 பேரைக் கைதுசெய்தனர். குறித்த இளைஞர் போக்குவரத்து சோதனை நிறுத்தத்தில் இருந்து தப்பி செல்ல முயற்சித்த நிலையில்,  துப்பாக்கி […]

பொழுதுபோக்கு

“டாடா” சொல்லிவிட்டு புறப்பட்ட மணிமேகலை! எங்கு சென்றார் தெரியுமா?

  • June 28, 2023
  • 0 Comments

திருப்பூரில் பிறந்து பட்டப் படிப்பை முடிக்கும் முன்பே தனது 17வது வயதிலேயே பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை. சுமார் 14 ஆண்டுகளாக இவர் இந்த துறையில் பயணித்து வருகிறார். MBA பட்டதாரியான மணிமேகலை கடந்த 2017ம் ஆண்டு துணை நடன இயக்குனராக இருந்த ஹுசைன் ஷாஹித் காதர் என்பவரை காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மணிமேகலின் புகழை […]

இலங்கை

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 301 ரூபா 15 சதமாக பதிவாகியுள்ளது. டொலரின் விற்பனைப் பெறுமதி, 316 ரூபா 67 சதமாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபா 25 சதமாகவும், விற்பனை பெறுமதி 316 ரூபா 72 சதமாகவும் பதிவாகி இருந்தது

உலகம்

மெக்சிகோவில் காவல் துறை அதிகாரிகள் கடத்தப்பட்டனர்!

  • June 28, 2023
  • 0 Comments

மெக்சிகோவின் சியாபாஸ் மாநிலத்தில் 14 மாநில காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (27.06) இடம்பெற்றுள்ளது. இது குறித்து  சியாபாஸ் மாநிலத்தின் குடிமக்கள் பாதுகாப்பு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ’14 அதிகாரிகள் அனைவரும் ஆண்கள் என்றும்,  அவர்களைக் கண்டுபிடிக்க வான் மற்றும் தரைப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், தெரிவிக்கையில்,  சியாபாஸின் தலைநகரை நோக்கி காவல்துறை அதிகாரிகள் பயணம் செய்த […]

செய்தி

ரொரன்றோவில் மாயமான குழந்தை தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

  • June 28, 2023
  • 0 Comments

கனடாவின் ரொரன்றோவில் ஐந்து நாட்களாக காணாமல் போயிருந்த நான்கு வயது குழந்தை கிடைத்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். மார்க்கம் சாலை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த நபர் ஒருவருடன், ஒரு நான்கு வயது குழந்தையும் வாழ்ந்துவந்துள்ளது.திங்கட்கிழமை மதியம் பொலிஸார் அந்த வீட்டுக்கு அழைக்கப்பட்டார்கள். அப்போது, அந்த நபர் இறந்துகிடப்பதை பொலிஸார் கண்டுள்ளார்கள். ஆனால், அவருடன் இருந்த அந்த குழந்தையை வீட்டில் காணவில்லை. குழந்தையை யாராவது கடத்தியிருக்கலாம் என கருதிய பொலிஸார் அவளைக் கண்டுபிடிப்பதற்காக ஆம்பர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில், […]

ஆசியா

வீடு புகுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்

  • June 28, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மலக்ஹண்ட் மாவட்டம் பெட்ஹிலா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் இன்று புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்குள் வெடிபொருட்களுடன் ரகசியமாக நுழைந்த ஆளில்லா விமானம்!

  • June 28, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ஆளில்லாவிமானம் வெடிபொருட்களுடன் ரஸ்யாவிற்குள் விழுந்து நொருங்கியுள்ளதை காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புட்டினின் ஆதரவு சமூக ஊடகங்களில் இந்த படங்கள் வெளியாகியுள்ளன. சைபக் என்ற அவுஸ்திரேலிய நிறுவனமொன்று தயாரித்துள்ள ஆளில்லா விமானமே ரஸ்யாவிற்குள் விழுந்து நொருங்கியுள்ளது. அதேவேளை குறிப்பிட்ட நிறுவனம் பலமாதங்களாக உக்ரைன் இராணுவத்திற்கு ஆளில்லா விமானங்களை வழங்கி வந்துள்ளது. ரஸ்யாவிற்குள் விழுந்து நொருங்கிய விமானத்தின் இறக்கையில் வெடிக்கும்கருவிகள் காணப்படுகின்றதாக டெலிகிராமில் ரஸ்யர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசைகள் வெளியீடு: இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்த இடம்

இங்கிலாந்தைச் சேர்ந்த Quaccarelli Symonds (QS) என்ற அமைப்பு, உலகின் உயர்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து, உலகின் சிறந்த பல்கலைக்கழக தரவரிசைகளை வெளியிடுகிறது. அந்த வகையில் நேற்று வெளியான தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149வது இடத்தில் உள்ளது. இதற்கு முன் 2016ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147வது இடத்தில் இருந்தது. அதன் பிறகு இப்போது ஐ.ஐ.டி. மும்பை 149வது இடத்தில் உள்ளது. இது […]

பொழுதுபோக்கு

வெடித்தது விவாகரத்து செய்தி! முற்றுப்புள்ளி வைத்தார் அசின்

  • June 28, 2023
  • 0 Comments

நடிகை அசின் அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை போட்ட அசின், “கோடை விடுமுறையை கழித்து வரும் இந்த வேளையில், இருவரும் ஜாலியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் இதுபோன்ற கற்பனையான, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பார்க்க முடிந்தது. இதைப்பார்க்கும் போது திருமணத்துக்கு முன் நடந்த சம்பவம் தான் ஞாபகம் வருகிறது. நாங்கள் எங்கள் […]

இலங்கை

தாயகப் பகுதியில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது – அண்ணாமலை!

  • June 28, 2023
  • 0 Comments

இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில்  இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைவடைந்துள்ளமை எனக்கு கரிசனை அளிக்கின்றது. இந்த போக்கு கவலையளிக்கும் விடயம் ஏனென்றால் எதிர்வரும் காலங்களில் இந்த பகுதிகளில் இந்துக்களின் கலாச்சாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். பலஆயிரங்களாக இலங்கையின் வடக்குகிழக்கு தனிப்பட்ட கலாச்சாரம் […]