இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான வேன் மோதி விபத்து!! ஒருவர் உடல் நசுங்கி பலி
மொரட்டுவ பிரதேசத்தில் இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான வேன் மோதியதில் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் 58 வயதான பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்திற்குள்ளான வேன் சைக்கிளில் பயணித்தவர் மீதும், சாலையோரம் நடந்து சென்ற பாதசாரிகள் மீதும் மோதி நின்றது.
விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)