ஐரோப்பிய நாடொன்றில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ள பாகிஸ்தான் உயரதிகாரிகள்

பாகிஸ்தானின் உயரதிகாரிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் அந்நாட்டின் குடியுரிமை பெற முயற்சித்து வருவதாக இராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
“நம் நாட்டின் பிரபலமான அதிகாரிகள் பல நூறு கோடி ரூபாய் கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு மாற்றி, போர்ச்சுக்கலில் சொத்துக்கள் வாங்கி குவித்து வருகிறார்கள். ஓய்விற்குப் பின் சொகுசான வாழ்க்கை நடத்துவதற்காக நாடு விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.”
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் உஸ்மான் பஸ்தாருக்கு நெருக்கமான ஒருவர், தனது மகளின் திருமண பரிசு என்ற பெயரில் மட்டும் 400 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில், அரசியல்வாதிகள் பொதுமக்களால் பிடிபடுகிறார்கள். ஆனால் அதிகாரிகள் தப்பித்து விடுகிறார்கள்” என்பதையும் அவர் வலியுறுத்தினார்.