டேரில் மிட்செல்க்கு பதில் சென்னை அணிக்கு வரும் கிளென் மேக்ஸ்வெல்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் பல அணிகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ஏலம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் அந்த அணியை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில சீசர்களாக மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார். மேலும் காயம் காரணமாக பல போட்டிகளில் அவர் விளையாடவில்லை. எனவே ஐபிஎல் 2025-ல் அவரை ஆர்சிபி அணி தக்க வைக்காது என்று கூறப்படுகிறது. ஒருவேளை மேக்ஸ்வெல் ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க மூன்று அணிகள் ஆர்வமாக உள்ளன.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல்லில் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே ஐபிஎல் 2025ல் ஏலத்தில் நல்ல வீரர்களை எடுக்க குறிக்கோளுடன் உள்ளது.
மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரர் டெல்லி அணிக்கு தேவைப்படுகிறது, எனவே அவரை ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்க டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாகம் தயாராக உள்ளது. மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்தால் எப்பேர்ப்பட்ட போட்டியும் அவரால் மாற்றி கொடுக்க முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில் டெல்லி அணிக்கு மேக்ஸ்வெல் போன்ற ஒரு வீரர் தேவைப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிராவோ மற்றும் அம்பதி ராயுடுவிற்கு விற்கு பிறகு கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாட பிளேயர்கள் இல்லாமல் தவித்து வருகிறது.
அவர்களுக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் டேரி மிட்சல், சமீர் ரிஸ்வி போன்ற வீரர்களை எடுத்தாலும் அவர்கள் சிறப்பாக விளையாடவில்லை. எனவே கிளென் மேக்ஸ்வெல் போன்ற ஒரு ஆல் ரவுண்டரை சென்னை சூப்பர் கிங்ஸ் தேடி வருகிறது. மேக்ஸ்வெல் பேட்டிங்கை தாண்டி பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும்.
அதுவும் சென்னை போன்ற ஸ்பின்னர்களுக்கு சாதகமான மைதானத்தில் மேக்ஸ்வெல் அதிக விக்கெட்களை எடுக்க முடியும். எனவே மேக்ஸ்வெல் ஏலத்தில் வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை தங்கள் அணியில் எடுக்க அதிக முயற்சி செய்யும்.
டெல்லி அணியை போலவே பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே அடுத்த ஆண்டு கோப்பையை வெல்ல அவர்கள் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய உள்ளனர்.
மேக்ஸ்வெல் இதற்கு முன்பு பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளார். அதன் பிறகு நடைபெற்ற ஏலத்தில் அவர்களால் மேக்ஸ்வெல்லை எடுக்க முடியவில்லை. இந்நிலையில் ஆர்சிபி அணியில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேறினால் அவரை தங்கள் அணியில் எடுக்க அனைத்து முயற்சிகளையும் பஞ்சாப் மேற்கொள்ளும்.