Tamil News

கொக்குத்தொடுவாயில் காட்டு யானைகள் அட்டகாசம் ; நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் அழித்து நாசம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் மக்களின் வாழ்வாதார பயிரான தென்னை மரங்களை அழித்துள்ளன.

நேற்று (13.10.23) இரவு குறித்த கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் தென்னந்தோட்ட செய்கையினையே வாழ்வாதாரமாக மேற்கொண்டுவரும் தெங்கு செய்கையாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட பயன்தரு தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளது.

கொக்குத்தொடுவாய் வடக்கு கிராமத்தில் தெங்கு செய்கையினை மேற்கொண்டுவரும் இராசேந்திரம் மற்றும் சிவலிங்கம் ஆகிய இருவரின் தென்னந்தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் காய்த்து பயன் பெற்றுக்கொண்டிருக்கும் தென்னங்கன்றுகளை அழித்து நாசம் செய்துள்ளன.

இருவரின் தோட்டங்களுக்குள்ளும் சுமார் 110 தென்னை மரங்கள் இவ்வாறு யானைகளால் அழிக்கப்பட்டுள்ளன.

காய்த்துக்கொண்டிருக்கும் மரங்களையும் தள்ளிவிழுத்தி அதில் இருந்த தேங்காய்களையும் யானைகள் சாப்பிட்டுள்ளதுடன் பல தென்னங்கன்றுகள் குருத்து இழுத்து சாப்பிட்டுள்ளன.தென்னம் பிள்ளைகளை வைத்து வளர்த்து அதில் இருந்து பயன் எடுத்துவரும் காலகட்டங்களில் இவ்வாறான சம்பவங்களால் உரிமையாளர்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர்.

Exit mobile version