இலங்கை

திருகோணமலையில் புத்தாடை தகைக்கச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கதி!

திருகோமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஜனவரி 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் சனிக்கிழமை (30) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவதினத்தன்று குறித்த 17 வயதுடைய சிறுமி புதிய ஆடை ஒன்றினை தைப்பதற்காக சுகாதார வைத்திய பணிமனைக்கு அருகில் உள்ள தையல் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது குறித்த இளைஞர் புதிய ஆடையை தைத்து தருவதற்கு சற்று நேரம் ஆகும் அதனால் இவ்விடத்திலேயே இருக்கும்படி தெரிவித்துள்ளதோடு சற்று நேரத்தின் பின் கடையை மூடிவிட்டு சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போதே ஜனவரி 8ஆம் திகதி வரை விளக்கம்மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content