பாலஸ்தீனிய அகதிகளுக்கான நிதியுதவியை அதிரடியாக நிறுத்திய மேற்குலக நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான நிதியுதவியை இத்தாலி, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலில் பல ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான தங்கள் நிதியுதவியை நிறுத்தியுள்ளன,
இந்நிலையில் பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா நிவாரண நிறுவனத்திற்கான ஆதரவை நிறுத்த சில நாடுகள் எடுத்த முடிவு பெரும் அரசியல் மற்றும் நிவாரண அபாயங்களை ஏற்படுத்துகிறது என்று பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) பொதுச்செயலாளர் ஹுசைன் அல்-ஷேக் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)