இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம்!
சிறுநீரில் யூரிக் அமிலம் அறிகுறிகள்: தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறையாலும் இன்று மக்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆளாகிறார்கள். யூரிக் அமிலப் பிரச்சனையும் இவற்றில் ஒன்று.
யூரிக் அமிலம் என்பது நம் உடலில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான கழிவுப் பொருளாகும். பொதுவாக, சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி உடலில் இருந்து சிறுநீர் மூலம் வெளியேற்றும். ஆனால் சில நேரங்களில் உடலில் யூரிக் அமிலம் அதிக அளவு உடலில் தங்கிவிடுகிறது. இது பல உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும்.
உடலில் தங்கும் யூரிம் அமிலம், சிறிய படிகங்களின் வடிவத்தில் மூட்டுகள் மற்றும் சிறுநீரகங்களில் குவியத் தொடங்குகிறது. உடலில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால், கீல்வாதம் மற்றும் வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். மூட்டுகள் மற்றும் எலும்புகளில் வலி, எலும்புகளில் வீக்கம் மற்றும் நடப்பதில் சிரமம் ஏற்படலாம். இது மட்டுமின்றி, நீண்ட நாட்களாக யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், சிறுநீரக கற்கள் பிரச்சனையும் ஏற்படும்.
யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, சிறுநீரில் சில மாற்றங்கள் தெரியும். அதை புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் சிறுநீரில் அதிக அளவு யூரிக் அமிலம் இருப்பது சிறுநீரக கற்களின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரில் யூரிக் அமிலம் அதிகரித்தால் அது எந்தவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்வோம்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். உண்மையில், நமது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி சிறுநீரின் மூலம் வெளியேற்றும். ஆனால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது, சிறுநீரகங்கள் சரியாக இயங்காது. இதன் காரணமாக, அவ்வப்போது சிறுநீரை வெளியேற்றுவதற்கான தூண்டுதல் ஏற்படும். இந்த பிரச்சனையை எதிர்கொண்டால், மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, சிறுநீரின் நிறத்திலும் மாற்றம் காணப்படும். இதன் காரணமாக, சிறுநீரின் நிறம் தண்ணீர் போல் தெளிவாக இல்லாமல் நுரைத்து காணப்படும். சிறுநீரில் இதுபோன்ற மாற்றங்களை கவனித்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கீல்வாத பிரச்சனைகளுக்கும் இது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
சிறுநீரில் அசாதாரண வாசனை அல்லது எரிச்சல்
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், துர்நாற்றம் ஏற்படுவதோடு, சிறுநீர் கழிக்குக்ம்போது எரிச்சல் உணவும் ஏற்படும். சிறுநீர் துர்நாற்றம் அல்லது எரிச்சல் ஏற்பட வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த பிரச்சனைகள் UTI அல்லது நீரிழிவு போன்ற நோய்களாலும் ஏற்படலாம். எனவே, இதுபோன்ற அறிகுறிகளை கவனித்தால், உடனடீயே மருத்துவரை அணுகவும். இதன் மூலம், மருத்துவர்கள் சரியான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
உடலில் யூரிக் அமிலத்தின் அதிகரிப்பு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உருவாகும். இது நீரிழப்புக்கு வழிவகுக்கும். உடலில் தண்ணீர் இல்லாததால் சிறுநீரிலும் இரத்தம் வரும். ஒருவித தொற்றுநோயால் பாதிக்கப்படுவீர்கள் என்பதற்கான அறிகுறி இது. நீங்களும் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைப்பது?
யூரிக் அமிலத்தைக் குறைக்க, இறைச்சி, கடல் உணவு, பால் மற்றும் சர்க்கரைப் பொருட்கள் போன்ற பியூரின் நிறைந்த உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். கூடுதலாக, நீங்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது.
இது தவிர, உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும், ஏனெனில் உடல் எடை அதிகரித்தால், அது யூரிக் அமிலத்தின் பிரச்சனையை அதிகரிக்கும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டு, போதுமான அளவு தண்ணீர் குடித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றவும்.