இரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் அவதானம் – எச்சரிக்கும் நிபுணர்கள்
இன்றைய காலகட்டத்தில் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை பலரிடம் காணப்படும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை மற்றும் உணவுமுறை இதற்கான முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானால் அதன் அறிகுறிகள் உடலில் தெரியும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
கொலஸ்ட்ரால் என்பது ஒரு ஒட்டும் மெழுகுப் பொருளாகும். இது உடலுக்கு புதிய செல்களை உருவாக்கவும், ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவுகின்றது. நமது உடல் சரியாக வேலை செய்ய, கொலஸ்ட்ரால் அவசியம் என்றாலும், அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான காரணங்கள்
பல வகையான காரணங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். அதிக அளவிலான நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக எடை, புகைபிடித்தல் மற்றும் மரபியல் காரணங்கள் ஆகிய பல வகையான காரணங்களால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமானால் உடலில் இரவில் சில அறிகுறிகள் தெரியும். இவற்றை கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெணடியது மிக அவசியமாகும்.
இரவு நேரங்களில் கால்களில் பிடிப்பு
ஒருவரது இரத்தத்தில் அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால் இருந்தால், உடலில் அழற்சி மற்றும் உடல் பாகங்களில் வலி ஏற்படும். இரவு வேளைகளில் இந்த வலி மோசமாகும். மருத்துவ மொழியில் இது ‘லெக் கிராம்ப்’ என கூறப்படுகின்றது. இரவில் இப்படிப்பட்ட வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படுவது அதிக கோல்ஸ்ட்ராலுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இரவில் அடிக்கடி கால் பிடிப்புகள் ஏற்பட்டால், கொலஸ்ட்ரால் அளவைச் சரிபார்ப்பது நல்லது.
தூக்கமின்மை
இரவில் தூக்கமின்மை, அமைதியற்ற உணர்வுகள் ஆகியவை அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவை குறிக்கின்றன. இதுவும் உயர் கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாகும். உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு இரவில் அமைதியாக தூங்குவது கடினமாகிறது. இரவில் பல முறை தூக்கம் கலையும். இது கொலஸ்ட்ரால், இருதய ஆரோக்கியம் மற்றும் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும்.
இரவில் அதிகமாக வியர்ப்பது
இதயத்தின் செயல்பாட்டில் பிரச்சனை வரும்போது இரவில் வியர்ப்பது ஒரு பொதுவான அறிகுறியாகும். ஆனால், இதய செயல்பாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அதிக கொலஸ்ட்ரால் அளவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இது தவிர, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது தொற்றுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாகவும் இரவில் வியர்வை வரக்கூடும். இரவில் அதிகம் வியர்த்தால், இதை கொலஸ்ட்ராலுக்கான அறிகுறியாக எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகி கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிப்பது நல்லது.
இரவு நேரத்தில் நெஞ்சு வலி
இரவில் திடீரென்று ஏற்படும் நெஞ்சு வலி நாக்டர்னல் ஆஞ்சினா என்றும் அழைக்கப்படுகிறது. இது அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதற்கான மற்றொரு அசாதாரண அறிகுறியாகும். அதிக கொழுப்பு பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். இதனால் இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் விளைவாக தூங்கும்போது மார்பு வலி ஏற்படும். இரவில் தொடர்ச்சியாக அல்லது கடுமையாக மார்பு வலி இருந்தால் உடனடியாக மருத்துவரை காண்பது நல்லது.
கால்களில் வீக்கம்
கெட்ட கொழுப்பு அதிகமானால் கால்கள், பாதங்கள் மற்றும் குதிகால் ஆகிய இடங்களில் அசாதாரண வீக்கம் இருக்கும். இது முதன்மையாக உடலின் கீழ் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் குறைவதால் நிகழ்கிறது. கொலஸ்ட்ரால் தமனிகளை அடைத்து வழக்கமான இரத்த ஓட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும். இதன் காரணமாக கால்களில் வீக்கம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிப்பது அவசியமாகும்.