வட அமெரிக்கா

மத்திய கிழக்கின் பாதுகாப்பை உறுதிசெய்ய போர் கப்பல்கள், விமானங்கள்:அமெரிக்கா

மத்தியக் கிழக்கின் பாதுகாப்பை மேம்படுத்த கூடுதல் போர்க் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பிவைக்கப்போவதாக அமெரிக்கத் பாதுகாப்பு அலுவலகமான பென்டகான் (ஆகஸ்ட் 2) வெள்ளிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே சில நாட்களுக்கு முன் ஈரானில் கொல்லப்பட்டார். மேலும் பல முக்கிய பாலஸ்தீன போராளிகளும் கொல்லப்பட்டு வருகின்றனர். இது மத்திய கிழக்கில் நடந்துவரும் இஸ்ரேல் ஹமாஸ் நேரடிப் போருடன், ஈரானின் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா போராளிகளும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியத்தை வலுப்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் செயல்படும் தமது போர்ப்படைகளின் பாதுகாப்புக்கும் இஸ்ரேலின் தற்காப்பை வலுப்படுத்தவும் அமெரிக்கா மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அங்கு ஏற்படக்கூடிய எவ்வித நிகழ்வுகளுக்கும் தயார் நிலையை உறுதிசெய்ய இந்த உத்தரவை அமெரிக்கத் பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் பிறப்பித்துள்ளார் என்று பென்டாகான் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு, ஐரோப்பா போன்ற இடங்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளை அழிக்கக் கூடுதல் போர்க்கப்பல்களை அமெரிக்கா அனுப்பிவைக்கிறது. வான்வழி மிரட்டல்களை சந்திக்க தனிப்பட்ட போர் விமானப் படை ஒன்றும் அனுப்பிவைக்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 13 அன்று இஸ்ரேல் மீது ஈரான் ஆளில்லா வானூர்த்திகளையும் ஏவுகணைகளையும் கொண்டு தாக்கியதிலிருந்து அமெரிக்கா அதன் மத்தியக் கிழக்கு போர்ப் படைகளை மேம்படுத்தி வருகிறது. அப்போழுது, அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் உதவியுடன் இஸ்ரேல் அந்த 300க்கும் மேற்பட்ட ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை தடுத்துவிட்டது.

தற்போது இஸ்ரேலுக்கு மிக அருகாமையில் உள்ள லெபானில் இயங்கும் ஹிஸ்புல்லா போராளிகளின் ஆயுத பலம் மிகப் பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. சென்ற வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா மத்தியக் கிழக்கில் மேற்கொண்டுள்ள புதிய ராணுவத் திட்டங்களை விளக்கினார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content