ஆஸ்திரேலிய மக்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பு குறித்து எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவின் – நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படும் தொலைபேசி அழைப்பு குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளுக்கமைய, பொலிஸார் நடத்திய விசாரணையில், பொலிஸ் அதிகாரிகள் போல் வேடமணிந்த நபர்களால் மோசடி அழைப்புகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
கிடைத்த இலக்கங்கள் ஊடாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், போலி அழைப்புகள் மூலம் சிலரது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்பை உடனடியாக பதிவு செய்யுமாறு நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
எவ்வாறாயினும், தொலைபேசி அழைப்பின் நபரின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் உங்கள் தனிப்பட்ட தகவலை வெளியிட வேண்டாம் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த நபர்களுக்கு ஒருபோதும் வங்கிக் கணக்குத் தகவல்களை வழங்க வேண்டாம் என்றும், இணையம் அல்லது வேறு வழிகளில் பணம் கொடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
உங்களுக்குத் தெரியாமல் அல்லது உங்கள் கணக்குத் தகவலை மோசடி செய்பவருக்கு அளித்ததாக நீங்கள் நினைத்தால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.