ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு : அவரசர நிலையை பிரகடனப்படுத்த தீர்மானம்!
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை மீண்டும் வெடித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் எரிமலை வெடிப்பது இது நான்காவது முறையாகும்.
இதன் காரணமாக தென் ஐஸ்லாந்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
கடந்த டிசம்பரில் இருந்து எரிமலை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது, மேலும் அது எரிமலைக்குழம்புகளை வெளியேற்றுவதால், ஆபத்து மண்டலங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எரிமலையின் மேற்கு மற்றும் தெற்கில் இரண்டு இடங்களில் இருந்து எரிமலை வெடிப்பதாக ஐஸ்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கிரின்டாவிக் நகரின் கிழக்குப் பாதுகாப்புச் சுவர் வரை எரிமலைக்குழம்பு பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த எரிமலையை விரைவில் செயலிழக்கச் செய்யாவிட்டால், எரிமலைக் குழம்பு கடல் வரை பாயும் அபாயம் இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.