இலங்கை

மர்மமான முறையில் இருவேறு இடங்கில் இருவர் மரணம்…

நொச்சியாகம – பன்வெவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் உள்ள குழியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மரகஹவெவ – நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.இறந்தவர் நேற்று முன்தினம் மாலை வயலுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார்.அவர் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரையில் அறியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Odisha CID to investigate mysterious death of two Russian businessmen

இதேவேளை, நீர்கொழும்பு – காமச்சோதயா சந்தையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் 60 முதல் 70 வயதுக்கு இடைப்பட்ட, சுமார் 05 அடி 06 அங்குல உயரம், ஒல்லியான சாதாரண உடலமைப்பு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content