இந்தியாவில் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளிகள்! வைரலாகும் புகைப்படங்கள்
இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், தெலுங்கானாவில் மழையால் சேதமடைந்த தக்காளி குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் ஓன்று பதிவாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சந்தையில் வரத்து குறைந்ததால் இந்தியா முழுவதும் தக்காளி விலை கிலோ ₹100க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், தக்காளி விவசாயிகள் பலர் சில வாரங்களிலேயே கோடீஸ்வரர்களாகி விட்டனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் தக்காளி பயிரில் பல லட்சம் வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தக்காளி பாதிப்படைந்துள்ளது.. கடந்த சில நாட்களாக சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்து, விலை குறைய வாய்ப்புள்ள நிலையில், மழையால் சேதமடைந்த தக்காளியை, கால்நடைகளுக்கு தீவனமாக டம்ப் லாரிகளில் அனுப்பும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சமீபகாலமாக தக்காளி விலை குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது தக்காளி குப்பையில் கொட்டப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.